/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/சிதம்பராபும் பஞ்., கூட்டமைப்புக்கு ரூ.14.65 லட்சம் கடன் உதவிசிதம்பராபும் பஞ்., கூட்டமைப்புக்கு ரூ.14.65 லட்சம் கடன் உதவி
சிதம்பராபும் பஞ்., கூட்டமைப்புக்கு ரூ.14.65 லட்சம் கடன் உதவி
சிதம்பராபும் பஞ்., கூட்டமைப்புக்கு ரூ.14.65 லட்சம் கடன் உதவி
சிதம்பராபும் பஞ்., கூட்டமைப்புக்கு ரூ.14.65 லட்சம் கடன் உதவி
திருநெல்வேலி:சிதம்பராபுரம் பஞ்., அளவிலான கூட்டமைப்புக்கு இந்தியன் ஓவர்சீஸ் பாங்க் மூலமாக 14.65 லட்சம் கடனை கலெக்டர் செல்வராஜ் வழங்கினார்.தமிழக அரசின் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் செயல்படும் மானூர், குருவிகுளம், வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில், மேலநீலிதநல்லூர், கடையநல்லூர் ஒன்றியங்களில் 156 பஞ்., அளவிலான கூட்டமைப்பு மறு சீரமைக்கப்பட்டு அனைத்து பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், கூட்டமைப்பில் இணைந்த குழு உறுப்பினர்கள் தங்கள் பொருளாதார தேவையை பூர்த்தி செய்ய கூட்டமைப்பு மூலம் இந்தியன் ஓவர்சீஸ் பாங்க் மானூர், பேட்டை, கீழநீலிதநல்லூர், நாரணம்மாள்புரம் கிளைகளின் மூலம் இதுவரை 18 கூட்டமைப்புகளுக்கு 4.17 கோடி விடுவிக்கப்பட்டு கூட்டமைப்புகள் பாங்க் கடனை 100 சதவீதம் திருப்பி செலுத்தி வருகின்றன.
இதன் தொடர்ச்சியாக குருவிகுளம் ஒன்றியம் சிதம்பராபுரம் பஞ்., அளவிலான கூட்டமைப்புக்கு செவல்குளம் இந்தியன் ஓவர்சீஸ் பாங்க் கிளை மூலம் பாங்க் பெருங்கடனாக 14.65 லட்சம் ரூபாயை கலெக்டர் செல்வராஜ் வழங்கினார்.இதில் பாங்க் மண்டல முதுநிலை மேலாளர் சீனிவாசன், முன்னோடி பாங்க் மேலாளர் ராமசுப்பு, மகளிர் திட்ட அலுவலர் ராமமூர்த்தி, வாழ்ந்துகாட்டுவோம் உதவி திட்ட மேலாளர்கள் அசன், சிவசுப்பிரமணியன், அனைத்து பாங்குகளின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.


