/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/குடும்ப ஓய்வூதியத்தை உயர்த்த வலியுறுத்தல்குடும்ப ஓய்வூதியத்தை உயர்த்த வலியுறுத்தல்
குடும்ப ஓய்வூதியத்தை உயர்த்த வலியுறுத்தல்
குடும்ப ஓய்வூதியத்தை உயர்த்த வலியுறுத்தல்
குடும்ப ஓய்வூதியத்தை உயர்த்த வலியுறுத்தல்
ADDED : ஆக 19, 2011 01:42 AM
திருநெல்வேலி:கிராம முன்சீப், கர்ணங்களின் விதவை மனைவிகளுக்கு குடும்ப ஓய்வூதியத்தை உயர்த்த வலியுறுத்தப் பட்டது.நெல்லையில் மாவட்ட (மேற்கு) அரசு ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்க செயற்குழுக்கூட்டம் நடந்தது.
சங்கத் தலைவர் கதிர்வேல் ஆறுமுகம் தலைமை வகித்தார். செயலாளர் புரு÷ஷாத்தமன், பொருளாளர் நாகரத்தினம், கண்ண பிரான் காந்தம், குமாரவேல் உட்பட பலர் பேசினர்.
அரசுத்துறைகளில் 50 ஆயிரம் காலிப்பணியிடங்களை நிரப்புவது, ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களின் வாரிசுகளுக்கு அரசுப்பணி அளிப்பது, முன்னாள் கிராம முன்சீப்கள், கர்ணங்களின் விதவை மனைவிகளுக்கு குடும்ப ஓய்வூ திய த்தை மூத்த குடிமக்கள் உதவித்தொகைக்கு இணையாக 500 ரூபாயில் இருந்து 1,000 ரூபாயாக அதிகரிப் பது, அங் கன்வாடி, சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் அளிப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


