மீனம் பார்க் பள்ளி மாணவர்கள் சாதனை
மீனம் பார்க் பள்ளி மாணவர்கள் சாதனை
மீனம் பார்க் பள்ளி மாணவர்கள் சாதனை
ADDED : ஆக 19, 2011 02:23 AM
சேலம்: மேட்டூர் வட்ட அளவிலான போட்டியில், மீனம்பார்க் பள்ளி மாணவர்கள்
சாதனை படைத்துள்ளனர்.
மேட்டூரில் வட்ட அளவிலான குழு விளையாட்டு போட்டிகள்,
வள்ளுவர் வாசுகி மெட்ரிக்குலேஷன் பள்ளியில் நடந்தது. போட்டியில் மேட்டூர்
பகுதியை சேர்ந்த, 15க்கும் மேற்பட்ட பள்ளிகள் கலந்து கொண்டது. இளையோருக்கான
கைப்பந்து போட்டியில், மீனம்பார்க் மாணவர்கள் தொடர்ந்து நான்காவது
முறையாகவும், மூத்தோருக்கான கைப்பந்து போட்டியில், முதல் முறையாகவும்
வெற்றி பெற்றனர். மாணவர்களை, பள்ளி தாளாளர் பொன்செல்வதுரை, செயலாளர்
மீனாராணி மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.


