/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/திருவள்ளுவர் அறக்கட்டளையில் கல்வி உதவித் தொகை வழங்கல்திருவள்ளுவர் அறக்கட்டளையில் கல்வி உதவித் தொகை வழங்கல்
திருவள்ளுவர் அறக்கட்டளையில் கல்வி உதவித் தொகை வழங்கல்
திருவள்ளுவர் அறக்கட்டளையில் கல்வி உதவித் தொகை வழங்கல்
திருவள்ளுவர் அறக்கட்டளையில் கல்வி உதவித் தொகை வழங்கல்
ADDED : ஆக 19, 2011 02:37 AM
புதுச்சேரி:திருவள்ளுவர் கல்வி அறக்கட்டளை சார்பில் கல்வி உதவித் தொகை வழங்கும் விழா தமிழ் சங்கத்தில் நடந்தது.சிவக்குமார் வரவேற்றார்.
கவுரவ தலைவர் பெரியாண்டி தலைமை தாங்கினார். நிறுவனர் சரவணன், பூபாலன் உரையாற்றினார்.பல்வேறு கிராமங்களை சேர்ந்த 20 கல்லூரி மாணவர்களுக்கு 3 ஆயிரம் ரூபாய் முதல் 5 ஆயிரம் ரூபாய் வரை கல்வி ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. புதுச்சேரிக்கு உட்பட்ட 15 மீனவ கிராமங்களில் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற 2 மாணவர்களுக்கு தலா ஆயிரம் ரூபாயும், கல்வி உபகரணங்களும் வழங்கப்பட்டன.விழாவில் மல்லாடி கிருஷ்ணாராவ் எம்.எல்.ஏ., பல்கலைக்கழக இயக்குனர் ராமதாஸ், முன் னாள் அமைச்சர் ஷாஜகான், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் அனந்தராமன், ஜெயமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண் டனர்.


