Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/தனி யூனியன் பிரதேசமாக்க வலியுறுத்தல் காரைக்கால் போராட்டக்குழு ஆர்ப்பாட்டம்

தனி யூனியன் பிரதேசமாக்க வலியுறுத்தல் காரைக்கால் போராட்டக்குழு ஆர்ப்பாட்டம்

தனி யூனியன் பிரதேசமாக்க வலியுறுத்தல் காரைக்கால் போராட்டக்குழு ஆர்ப்பாட்டம்

தனி யூனியன் பிரதேசமாக்க வலியுறுத்தல் காரைக்கால் போராட்டக்குழு ஆர்ப்பாட்டம்

ADDED : ஆக 19, 2011 02:42 AM


Google News
காரைக்கால்:காரைக்காலை தனி யூனியன் பிரதேசமாக்க கோரி காரைக்கால் போராட்டக்குழு சார்பில் கலெக் டர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

மாதாக்கோவில வீதியில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு காரைக்கால் போராட்டக்குழு நிறுவனர் ராமசீனிவாசன் தலைமை தாங்கினார். நிறுவனர் திருநாவுக்கரசு துவக்கி வைத்தார். போராட்டக்குழு அமைப்பாளர் செல்வ சண்முகம் போராட்டத்தின் நோக்கம் குறித்து விளக்கினார்.காரைக்கால் பகுதி, புதுச்சேரி அரசால் கடந்த 57 ஆண்டுகளாக புறக்கணிக்கப்பட்டு வருகிறது. காரைக்கால் பிரச்னைகளில் அக்கறை செலுத்தவில்லை. நாட்டில் லஞ்சம், ஊழலை ஒழித்துக் கட்ட மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.

ஊழலுக்கு எதிராக கடுமையாக லோக்பால் சட்டம் கொண்டு வர வலியுறுத்தி போராடி வரும் அன்னா ஹசாரேவுக்கு அனைவரும் ஆதரவளிக்க வேண்டும்.கடந்த 10 ஆண்டு காலத்தில் புதுச்சேரி அரசு தனது பட்ஜெட்டில் காரைக்கால் பகுதிக்கென அறிவிக்கப்பட்ட திட்டங்களை இதுவரை நிறைவேற்றவில்லை.

காரைக்கால் பகுதிக்கென தனி நிதிநிலை அறிக்கையை அரசு தாக்கல் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us