Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/நிலத்தை உரிமையாளர்களுக்கு திருப்பித் தர உத்தரவு : வீட்டுவசதி வாரியத்தின் அப்பீல் மனுக்கள் தள்ளுபடி

நிலத்தை உரிமையாளர்களுக்கு திருப்பித் தர உத்தரவு : வீட்டுவசதி வாரியத்தின் அப்பீல் மனுக்கள் தள்ளுபடி

நிலத்தை உரிமையாளர்களுக்கு திருப்பித் தர உத்தரவு : வீட்டுவசதி வாரியத்தின் அப்பீல் மனுக்கள் தள்ளுபடி

நிலத்தை உரிமையாளர்களுக்கு திருப்பித் தர உத்தரவு : வீட்டுவசதி வாரியத்தின் அப்பீல் மனுக்கள் தள்ளுபடி

ADDED : ஆக 20, 2011 11:14 PM


Google News
Latest Tamil News

சென்னை : வீட்டுவசதி திட்டத்துக்காக ஆர்ஜிதம் செய்த நிலத்தை உரிமையாளர்களுக்கு திருப்பித் தர உத்தரவிட்டதை எதிர்த்து, வீட்டுவசதி வாரியம் தாக்கல் செய்த அப்பீல் மனுக்களை, சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது.



கோவையில் காளப்பட்டி வீட்டுவசதி திட்டத்துக்காக, 1,973 ஏக்கர் நிலம் ஆர்ஜிதம் செய்வது தொடர்பாக, அறிவிப்பாணை பிறப்பிக்கப்பட்டது. பின், 1,186 ஏக்கர் நிலத்தை விட்டு விட்டு, 787 ஏக்கர் நிலத்துக்கு அறிவிப்பாணை வெளியிட்டது. அதிலும் சில இடங்களை விட்டு விட்டு, கடைசியில் 671 ஏக்கர் நிலத்துக்கு இழப்பீடு வழங்குவதற்கு உத்தரவிட்டது. 496 ஏக்கர் நிலம் தொடர்பாக 299 ரிட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இவற்றில் 102 'ரிட்' மனுக்களில், நில உரிமையாளர்களுக்கு சாதகமாக உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. இவ்வாறு 176 ஏக்கர் நிலத்தை உரிமையாளர்களுக்கு திருப்பித் தர ஐகோர்ட் உத்தரவிட்டது. நிலத்தை திருப்பித் தரக் கோரி, உரிமையாளர்கள் சிலர் கோரியதை, அரசு நிராகரித்து கடந்த 2008ம் ஆண்டு ஜனவரி மாதம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்தும், அறிவிப்பாணையை எதிர்த்தும் ஐகோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இம்மனுக்களை நீதிபதி சந்துரு, பைசல் செய்தார். நில உரிமையாளர்கள் சிலருக்கு நிலத்தை திருப்பித் தரவும் உத்தரவிட்டிருந்தார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.



இதை எதிர்த்து, வீட்டுவசதி வாரியம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அப்பீல் மனுவில் கூறியிருப்பதாவது: நில ஆர்ஜிதம் தொடர்பாக அமைக்கப்பட்ட உயர்மட்டக் குழு தாக்கல் செய்த அறிக்கையில், 530 ஏக்கர் நிலத்தில் வீடு கட்டும் திட்டத்தை அரசு அமல்படுத்த முடிவெடுத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. அரசு எடுத்துள்ள நிலையை, தனி நீதிபதி பரிசீலிக்கவில்லை. காளப்பட்டி வீட்டுவசதி திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்றால், குறிப்பிட்ட சர்வேயில் உள்ள நிலம் அவசியம் தேவைப்படுகிறது. நிலம் தொடர்பான இழப்பீடுக்கு உத்தரவிடப்பட்டு, சிவில் கோர்ட்டிலும் டெபாசிட் செய்யப்பட்டு விட்டது. தனிப்பட்ட நலனை விட பொது நலன் மிகவும் முக்கியம். எனவே, கடந்த ஆண்டு ஆக., 30ம் தேதி தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அப்பீல் மனுவில் கூறப்பட்டுள்ளது.



நில உரிமையாளர்கள் சார்பில் வழக்கறிஞர் பி.சந்திரசேகரன், 'தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு விரிவான காரணங்கள் கூறப்பட்டுள்ளன. சட்டத்தை அமல்படுத்துவதில் பாரபட்சத்தை அரசு காட்டியுள்ளது. குறிப்பிட்ட ஒருவருக்கு நிலத்தை திருப்பித் தர அரசு உத்தரவிட்டுள்ளது. இது தவறான உத்தரவு என, அப்பீல் வழக்கில் அரசு ஒரு நிலையை எடுக்கிறது. இது சரியல்ல' என வாதிட்டார்.



அப்பீல் மனுவை விசாரித்த தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் அடங்கிய 'முதல் பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவு: நிலத்தை பழனியம்மாள் என்பவருக்கு திருப்பித் தர அரசு உத்தரவிட்டது தவறானது என்றும் அதையே பின்பற்ற வேண்டும் என வற்புறுத்த முடியாது என்றும் வீட்டுவசதி வாரியம் தரப்பில் வாதிடப்பட்டது. 'ரிட்' மனுவில் தாக்கல் செய்த பதில் மனுவைப் பார்க்கும் போது, இந்த வாதத்தை தனி நீதிபதியின் முன் வாரியம் தரப்பில் எழுப்பவில்லை. உயர்மட்டக் குழு பரிந்துரையின்படி, தீர்மானத்தை வாரியம் நிறைவேற்றி, பழனியம்மாளுக்கு நிலத்தை திருப்பித் தர உத்தரவிட்டுள்ளது என பதில் மனுவில் கூறியுள்ளது. தற்போது அப்பீல் மனுவில், புதிய நிலையை வாரியம் எடுக்க முடியாது. நில உரிமையாளர்களிடம் இருந்து மனுதாரர்கள் நிலங்களை வாங்கி, அதில் வீடுகளை கட்டி வசிக்கின்றனர். எனவே, பழனியம்மாளுக்கும், மனுதாரர்களுக்கும் இடையே எந்த வேறுபாடும் இல்லை. மனுதாரர்களை வித்யாசப்படுத்தி பார்த்தால், அது பாரபட்சமானது. குழுவின் பரிந்துரையின் அடிப்படையில், நில உரிமையாளர்கள் பலரின் கோரிக்கையை ஏற்று, நிலங்களை திருப்பித் தரும் முடிவை அரசு எடுத்துள்ளது. சிலர் விஷயத்தில் அரசு நிராகரித்துள்ளது. இத்தகைய நடவடிக்கையானது தன்னிச்சையானது, பாரபட்சமானது, அரசியலமைப்புச் சட்டத்தை மீறுவதாக உள்ளது. எனவே, மனுதாரர்களை வேறுவிதமாக நடத்துவது என்பது பாரபட்சமானது. தனி நீதிபதியின் உத்தரவு சரியானதே. அந்த உத்தரவில் குறுக்கிட தேவையில்லை. அப்பீல் மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு 'முதல் பெஞ்ச்' உத்தரவிட்டுள்ளது.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us