120 வித ஒலியெழுப்பும் ஆப்பிரிக்க கிளி : விலையைக் கேட்டதும் மக்கள் அதிர்ச்சி
120 வித ஒலியெழுப்பும் ஆப்பிரிக்க கிளி : விலையைக் கேட்டதும் மக்கள் அதிர்ச்சி
120 வித ஒலியெழுப்பும் ஆப்பிரிக்க கிளி : விலையைக் கேட்டதும் மக்கள் அதிர்ச்சி

ஈரோடு: ஈரோட்டுக்கு விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ள, ஆப்பிரிக்க சாம்பல் நிற கிளி, 120 விதமாக ஒலியெழுப்புகிறது.
ஈரோடு கனி மார்க்கெட்டில், பறவைகள் விற்பனை கடையில், ஆப்பிரிக்காவை சேர்ந்த சாம்பல் வண்ண கிளி விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. பொதுவாகவே கிளிகள் பேசும் திறன் கொண்டவை. அதிலும், ஆப்பிரிக்க காடுகளில் வாழும் சாம்பல் வண்ணக் கிளிகள், மனிதர்கள் பேசும்போது, ஒலியை துல்லியமாக கவனித்து, மீண்டும் உச்சரிக்க கூடியவை. 120 வகையான ஒலிகளை எழுப்பக்கூடியவை. நினைவாற்றல் திறன் அதிகம் கொண்டவை. இவற்றின் ஆயுள் காலம், 80 முதல், 95 ஆண்டு. சாதாரணமாக பஞ்சவர்ணக் கிளிகள், 500 ரூபாய் முதல், 3,000 ரூபாய் வரையான விலையில் உள்ளன. ஆனால், ஒரு வயதான சாம்பல் கிளி விலை, 35 ஆயிரம் ரூபாய். நன்கு வளர்ந்த கிளி, ஒரு லட்சம் ரூபாய் வரை விலை கூறப்படுகிறது. வீடுகளில் அழகுக்காகவும், பெரிய அளவிலான வர்த்தக நிறுவனங்கள், ஐந்து நட்சத்திர ஓட்டல்களில் வாஸ்துவுக்காகவும் இவற்றை வாங்கிச் செல்கின்றனர்.


