/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/மயிலத்தில் தமிழ் கல்லூரியில் ஐம்பெரும் விழாமயிலத்தில் தமிழ் கல்லூரியில் ஐம்பெரும் விழா
மயிலத்தில் தமிழ் கல்லூரியில் ஐம்பெரும் விழா
மயிலத்தில் தமிழ் கல்லூரியில் ஐம்பெரும் விழா
மயிலத்தில் தமிழ் கல்லூரியில் ஐம்பெரும் விழா
ADDED : ஆக 22, 2011 12:17 AM
மயிலம் : மயிலம் பொம்மபுர ஆதீனம் 20ம் பட்ட ஸ்ரீமத் சிவஞானபாலய சுவாமி களுக்கு வரவேற்பு விழா, செந்தமிழ் சிவப்பிரகாசர் கருத்தரங்க அறை திறப்பு விழா, முதுகலை வணிகவியல் வகுப்பு தொடக்க விழா, சமயப் பயிற்சி துவக்க விழா, நூல், இதழ் கள் வெளியீட்டு விழா கல்லூரி வளாகத்தில் நடந்தது.
மயிலம் பொம்மபுர ஆதீனம் 20ம் பட்ட சுவாமிகள் ஸ்ரீமத் சிவஞானபாலய சுவாமிகள் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் லட்சாராமன் வரவேற்றார். தினமணி நாளி தழ் ஆசிரியர் வைத்தியநாதன் ஆய்வரங்க அறையை திறந்து வைத்து, சமய பயிற்சி வகுப்பை துவக்கி வைத்தார். திருமடம், கல்லூரியின் சார்பில் 'சித்தர் சிவஞானி' ஆன்மீக இதழ், 'குறிஞ்சி மலர்கள்' ஆராய்ச்சி கட்டுரைகள், செவ்வி' ஆராய்ச்சி இதழ் ஆகிய நூல்களை மயிலம் பொம்மபுர ஆதீனம் 20ம் பட்ட ஸ்ரீமத் சிவஞானபாலய சுவாமிகள் வெளி யிட்டு ஆசியுரை வழங்கினார். நூலின் முதல் பிரதியை சென்னை பல்கலைக்கழக முன்னாள் தத்துவத் துறை பேராசிரியர் ரத்தினசபாபதி பெற்றுக்கொண்டார். கல்லூரி முன்னாள் முதல்வர் சிவலிங்கனார் வாழ்த்துரை வழங்கினார். சித்தர் சிவஞானி கல்லூரி செயலர் சிவக்குமார், சிவப்பிரகாசர் மேல்நிலைப் பள்ளி செயலர் விஸ்வநாதன், மயிலம் ஸ்டேட் பாங்க் மேலா ளர் முருகதாஸ், புதுச்சேரி தமிழ்ச்சங்க முன்னாள் தலைவர் தமிழ்மாமணி சீனு ராமச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். பொம்மையர்பாளையம் ராஜேஸ்வரி மக ளிர் கலை அறிவியல் கல்லூரி முதல் வர் முனைவர் வினாயகம் நன்றி கூறினார்.


