அமெரிக்கர்களுக்கு ஈரான் 8 ஆண்டு சிறை தண்டனை
அமெரிக்கர்களுக்கு ஈரான் 8 ஆண்டு சிறை தண்டனை
அமெரிக்கர்களுக்கு ஈரான் 8 ஆண்டு சிறை தண்டனை
UPDATED : ஆக 22, 2011 05:21 AM
ADDED : ஆக 22, 2011 03:30 AM
டெஹ்ரான்: ஈரான் நாட்டில் உளவு வேலை பார்த்ததாக அமெரிக்கர்கள் இருவருக்கு எட்டு ஆண்டுகள் சிறை தண்டனையை ஈரான்அரசு விதித்துள்ளது.
இது குறித்து அந்நாட்டின் இணைய தளம் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவித்திருப்பதாவது: கடந்த 2009-ம் ஆண்டு ஜூலை மாதம் 31-ம் தேதி ஈராக் எல்லைப்பகுதியில் அமெரிக்காவுக்காக உளவு வேலை பார்த்ததாக அமெரிக்கர்கள் ஷேன்பாயேர், ஜோஸ் பாதல், சாரா ஷோரூத் ஆகிய மூன்று பேரை ஈரான் அரசு கைது செய்தது.இது குறித்த விசாரணை ஈரான் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் 2010-ம் ஆண்டில் செப்டம்பர் மாதம் ரூ.ஐநூறாயிரம் அமெரிக்க டாலர் செலுத்தியதன் பேரில் சாரா ஷோரூத் மட்டும் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். மற்ற இருவரும் தொடர்ந்து சிறையில் இருந்தனர்.இந்நிலையில் இவ்வழக்கின் தீர்ப்பை ஈரான் அரசு வழங்கியுள்ளது. அதில் ஷேன் பாயேர் மற்றும் ஜோஸ்பாதல் ஆகியோருக்கு எட்டு ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. கடந்த 1979-ம் ஆண்டிற்கு பின்னர் அமெரிக்காவுடன் எந்தஒரு ராஜ்ய உறவையும் ஈரான் அரசு வைத்துக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.