பழநியில் காலால் காரை ஓட்டிய வாலிபர்
பழநியில் காலால் காரை ஓட்டிய வாலிபர்
பழநியில் காலால் காரை ஓட்டிய வாலிபர்
UPDATED : ஆக 22, 2011 05:23 AM
ADDED : ஆக 22, 2011 04:30 AM
பழநி:பழநி திருநகரில் டிரைவிங் ஸ்கூல் நடத்தி வருபவர் குமார்.
இவர், சமூக ஆர்வலர் அன்னாஹசாரேக்கு ஆதரவு தெரிவித்து காலால் காரை ஓட்டும் நிகழ்ச்சியை நேற்று பழநியில் நடத்தினார். நகராட்சி தலைவர் ராஜமாணிக்கம், குமாரின் இரண்டு கைகளையும் துண்டால் கட்டி, காரை காலால் ஓட்டும் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். காந்தி சிலை முன்பிருந்து காலால் காரை ஓட்ட துவங்கி ஆர்.எப்.,ரோடு, கண்ணகி ரோடு, ராஜேந்திரா ரோடு, நான்கு ரத வீதிகள், காந்தி ரோடு, அடிவாரம் ரோடு வழியாக 10 கி.மீ., தூரம் காலால் காரை ஓட்டினார்.குமார் கூறுகையில்,'திருவனந்தபுரத்தில் இருந்து சென்னை வரை 700 கி.மீ., தூரத்திற்கு காரை காலால் ஓட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்படும். இதன் மூலம் திரட்டப்படும் நிதியை தமிழக முதல்வரின் குழந்தைகள் தொட்டில் வளர்ப்பு திட்டத்திற்கு வழங்க திட்டமிட்டுள்ளேன்' என்றார்.