சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: பயஸ்-பூபதி ஜோடி சாம்பியன்
சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: பயஸ்-பூபதி ஜோடி சாம்பியன்
சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: பயஸ்-பூபதி ஜோடி சாம்பியன்
ADDED : ஆக 22, 2011 02:25 PM
சின்சினாட்டி:சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடரின், ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் லியாண்டர் பயஸ், மகேஷ் பூபதி ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது.
அமெரிக்காவில், சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடர் நடந்தது. இதன் ஆண்கள் இரட்டையர் பைனலில், இந்தியாவின் லியாண்டர் பயஸ், மகேஷ் பூபதி ஜோடி, பிரான்சின் மைக்கேல் லாட்ரா, செர்பியாவின் நினாடு ஜிமோன்ஜிக் ஜோடியை எதிர்கொண்டது. விறுவிறுப்பான பைனலில், அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய பயஸ்-பூபதி ஜோடி 7-6, 7-6 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது. பயஸ்-பூபதி ஜோடி, சுமார் பத்து ஆண்டுகளுக்கு பின் இத்தொடரில் மீண்டும் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. முன்னதாக கடந்த 2001ல் சாம்பியன் பட்டம் வென்றது. இது, இந்த ஆண்டு பயஸ்-பூபதி ஜோடி கைப்பற்றிய மூன்றாவது சாம்பியன் பட்டம். முன்னதாக சென்னை ஓபன், சோனி எரிக்சன் ஓபன் உள்ளிட்ட தொடர்களில் இந்திய ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது.