PUBLISHED ON : ஆக 23, 2011 12:00 AM

'இப்ப புரிஞ்சுதா...!'
சிதம்பரம் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணபிரான், சமீபத்தில் நடராஜர் கோவிலுக்கு சாதாரண உடையில் சென்றார். அவரிடம், தட்சிணாமூர்த்தி சன்னிதி தீட்சிதர், 'உங்கள் முகவரியை கொடுங்கள், மாதந்தோறும் வீட்டுக்கு பிரசாதம் அனுப்புகிறோம்' என்றார். முகவரி கொடுத்ததும், 750 ரூபாய் கேட்டு தீட்சிதர்
நச்சரிக்க, இன்ஸ்பெக்டர் அதிர்ச்சியடைந்து, பூஜை செய்யாமலேயே வெளி@யறினார். போன வேகத்தில், யூனிபார்முடன் வந்த இன்ஸ்பெக்டர், நடராஜர் கோவில் அரு@க வாகன சோதனை செய்தார். அப்போது, டூவீலர்களில் ஆவணமின்றி வந்த தீட்சிதர்களை மடக்கி, ஸ்டேஷனுக்கு அழைத்து வந்து,'லெப்ட் ரைட்' வாங்கிவிட்டார். பிறகுதான், கோவிலில் இன்ஸ்பெக்டர் அவமதிக்கப்பட்ட விவரம், மற்ற தீட்சிதர்களுக்கு தெரிந்தது. உடனே, சம்பந்தப்பட்ட தீட்சிதரை அழைத்து வந்து, மன்னிப்பு கேட்க வைத்தனர்.
இதை பார்த்த போலீஸ்காரர் ஒருவர், 'ஆவணங்கள் சரியா இருந்தாலே, வாகன ஓட்டிகளிடம் பணம் கறக்கும் எங்ககிட்டயே பணம் கேட்குறீங்களா? நாங்க யாருன்னு இப்ப புரிஞ்சுதா...' என, ஒரு 'உருட்டு' உருட்ட, தீட்சிதர்கள் மிரட்சியுடன், இடத்தை காலி செய்தனர்.
'எங்க டிரெய்னிங் எடுக்கறீங்க...!'
புதிய தலைமை செயலக கட்டடத்தை மருத்துவமனையாக்கும் திட்டத்தை, சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தபோது, காது கிழியாத குறையாக, எம்.எல்.ஏ.,க்கள் மேஜையை தட்டி கரகோஷம் செய்தனர். முதல்வரின் அறிவிப்பிற்கு, கட்சி வாரியாக எழுந்து, ஒவ்வொருவரும் நன்றி தெரிவித்து பேசினர். சாதாரணமாகவே, சபையில், எம்.எல்.ஏ.,க்களின் பேச்சு, 'ஐஸ்' வைப்பது போலத்தான் இருக்கும். அதிலும், தி.மு.க.,விற்கு, 'செக்' வைக்கும் வகையில், முதல்வரின் அறிவிப்பு அமைந்ததும், ஆளாளுக்கு, 'பஞ்ச்' டயலாக் பேசி அசத்தினர். தளி தொகுதி, இந்திய கம்யூ., எம்.எல்.ஏ., ராமச்சந்திரன் பேசும்போது, 'நம் முதல்வருக்கு எப்போதுமே தொலைநோக்கு பார்வை தான் உண்டு. ஆனால், தி.மு.க.,வினருக்கு எதிலுமே, 'தொகை'நோக்கு திட்டம் தான் உண்டு' என்றதும், முதல்வர் உட்பட அனைவரும் 'குபீர்' என, சிரித்தனர். நடிகர் சரத்குமாரோ, 'முதல்வரை, நான் டாக்டராக பார்க்கிறேன்' என்றதும், 'அடேங்கப்பா... இவங்கெல்லாம் எங்கப்பா டிரெய்னிங் எடுக்கறாங்க...' என, ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.,க்களே ஆச்சர்யப்பட்டனர்.


