/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/நீலகிரியில் தொடரும் மழையால் அணைகளில் தண்ணீர் வரத்து அதிகம்நீலகிரியில் தொடரும் மழையால் அணைகளில் தண்ணீர் வரத்து அதிகம்
நீலகிரியில் தொடரும் மழையால் அணைகளில் தண்ணீர் வரத்து அதிகம்
நீலகிரியில் தொடரும் மழையால் அணைகளில் தண்ணீர் வரத்து அதிகம்
நீலகிரியில் தொடரும் மழையால் அணைகளில் தண்ணீர் வரத்து அதிகம்
ADDED : ஆக 25, 2011 01:52 AM
மஞ்சூர் : பரவலான மழையால் அணைகளில் தண்ணீர் வரத்து அதிகரிக்க
துவங்கியுள்ளது.நீலகிரி மாவட்டம் மஞ்சூர் பகுதியை சுற்றி குந்தா, கெத்தை,
எமரால்டு, அவலாஞ்சி, அப்பர்பவானி உள்ளிட்ட அணைகள் குந்தா, கெத்தை,
அவலாஞ்சி, காட்டுக்குப்பை உள்ளிட்ட மின் நிலையங்கள் செயல்பட்டு வருகிறது.
அப்பர்பவானி அணையிலிருந்து ராட்சத குழாய் மூலம் கொண்டு வரப்படும் தண்ணீர்
மூலம் அவலாஞ்சியில் மின் உற்பத்தி செய்யப்பட்டு, பின் மீண்டும் ராட்சத
குழாய் மூலம் குந்தா அணைக்கு தண்ணீர் கொண்டு வரப்பட்டு சேமிக்கப்படுகிறது.
தொடர்ந்து கெத்தை, பரளி மற்றும் பில்லூர் வரை தண்ணீர் கொண்டு செல்லப்பட்டு
மீண்டும் மின் உற்பத்தி மேற்கொள்ளப்படுகிறது. பின் உபரி நீர் பவானி அணைக்கு
செல்கிறது. தற்போது கடந்த இரண்டு வாரங்களாக மஞ்சூர் சுற்றுவட்டார
பகுதிகளில் பெய்து வரும் பரவலான மழையால் அணைகளுக்கு தண்ணீர் வரத்து
அதிகரிக்க துவங்கியுள்ளது. குறிப்பாக முக்கிய அணையாக கருதப்படும் குந்தா
அணைக்கு வரும் நீரோடைகளில் தண்ணீர் வரத்து அதிகரிக்க துவங்கியதால், கெத்தை,
பரளி, பில்லூர் மின் நிலையங்களில் தடையின்றி மின் உற்பத்தி
மேற்கொள்ளப்பட்டு வருவதாக மின் வாரிய வட்டாரங்கள் கருத்து
தெரிவிக்கின்றனர்.
இது ஒரு புறமிருக்க, எமரால்டு பகுதியில் மலை காய்கறி விவசாயத்திற்கு ஏற்ற
அளவு மழை பெய்துள்ள நிலையில், அவலாஞ்சி அணைகளில் போதுமான அளவு தண்ணீர்
இல்லாததால் முக்கிய நீர் பிடிப்பு பகுதிகளான போர்த்தி ஹாடா நீர் பிடிப்பு
பகுதி மேய்ச்சல் நிலமாக மாறியுள்ளது.
அணைகளில் நீர் அளவு கொள்ளளவு இருப்பு
(அடியில்)
1.முக்குறுத்தி- 18 17.1
2.பைக்காரா- 89 76.0
3.சாண்டிநல்லா 49 19.5
4.கிளன்மார்கன் 33 16.0
5.மாயார் 17 16.1
6.அப்பர்பவானி 210 195.9
7.பார்சன்ஸ்வேலி 77 76.8
8.போர்த்தி மந்து 130 122.6
9.அவலாஞ்சி 171 128.6
10.எமரால்டு 184 142.5
11.குந்தா 89 85.4
12.கெத்தை 156 148.0
13.பில்லூர் 242 210.0


