ஆள்பற்றாக்குறை, மிஷின் பழுதால் அரசு அச்சகம் திணறல் : முக்கிய ஆவணங்கள் அச்சுப்பணி பாதிக்கும் அபாயம்
ஆள்பற்றாக்குறை, மிஷின் பழுதால் அரசு அச்சகம் திணறல் : முக்கிய ஆவணங்கள் அச்சுப்பணி பாதிக்கும் அபாயம்
ஆள்பற்றாக்குறை, மிஷின் பழுதால் அரசு அச்சகம் திணறல் : முக்கிய ஆவணங்கள் அச்சுப்பணி பாதிக்கும் அபாயம்
சென்னை : பட்ஜெட் அறிக்கைகள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் அச்சாகும், தமிழக அரசின் அச்சகத்தில், பணியாளர் பற்றாக்குறை, மிஷின்கள் பழுது, பராமரிப்பின்மை போன்றவற்றால், பணிகள் முடங்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
கடந்த ஐந்தாண்டுகளில், நூற்றுக்கணக்கானோர் ஓய்வு பெற்றதால், தற்போது, 690 ஊழியர்களே உள்ளனர். இவர்களில், பிழைத்திருத்துனர் பணிக்கு, அதிகபட்சமாக நான்கு பேர் மட்டுமே உள்ளனர். ஆறு இயந்திரங்கள் பழுதாகி ஓரங்கட்டப்பட்டுள்ளது. அடுத்த ஆறு மாதத்தில், 107 பேர் வரை ஓய்வு பெற உள்ளதால், பெரிய அளவில் பணியாளர் பற்றாக்குறை ஏற்படும் நிலை உள்ளது. தினமும், காலை 6 மணி ஷிப்டுக்கு வரும் பணியாளர்கள், மதிய ஷிப்டிலும் கட்டாய பணிக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதற்கு கூடுதல் ஊதியமும் இல்லை என்பதால், ஒட்டு மொத்த விடுப்பு எடுக்க ஊழியர்கள் முடிவு செய்துள்ளனர்.
சமச்சீர் கல்வி புத்தகங்கள் அச்சடித்து முடிந்த நிலையில், தற்போது சட்ட சபையில், பட்ஜெட் கூட்டத்தொடருக்கான மானிய கோரிக்கை புத்தகங்கள், ஆண்டறிக்கை, சட்ட சபை ஆவணங்கள், ஆகியவை, அச்சடிக்கும் பணிகள் மும்முரமாக நடக்கிறது. வரும் மாதங்களில், அரசுத் துறைகளின் புதிய காலண்டர், அரசு டைரிகள், புதிய ஆண்டுக்கான ஆவணங்கள் மற்றும் அக்டோபரில் வரவுள்ள உள்ளாட்சி தேர்தலுக்கு வாக்காளர் பட்டியல் அச்சடிக்கும் பணி துவங்க வேண்டிய நிலையில் உள்ளது. ஆனால், மிஷின்கள் பழுது, ஆள் பற்றாக்குறை, கூடுதல் பணிச்சுமை, ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ள ஊழியர்கள், பிரச்னைகளை தீர்க்க, கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து, அரசு அச்சக அண்ணா பொது தொழிலாளர் நலச் சங்கச் செயலர் பார்த்திபன் கூறும் போது,'கடந்த தி.மு.க., ஆட்சியில், நிர்வாக குளறுபடிகளால், மிஷின்கள் பராமரிக்கப்படவில்லை. நவீன தொழில்நுட்ப கருவி என, 4.5 கோடி ரூபாய் செலவில், புதிய அச்சு இயந்திரம் வாங்கப்பட்டு, அதை இயக்க ஆட்கள் இல்லாமலும், பழுதாகியும் முடக்கி வைத்துள்ளனர். இதுகுறித்து, விசாரிக்க வேண்டுமென, முதல்வருக்கும், அமைச்சருக்கும் மனு அளித்துள்ளோம்' என்றார்.


