Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/மாணவர்களிடையே சகோதரத்துவம் வளரவேண்டும்: ஐ.ஜி.,

மாணவர்களிடையே சகோதரத்துவம் வளரவேண்டும்: ஐ.ஜி.,

மாணவர்களிடையே சகோதரத்துவம் வளரவேண்டும்: ஐ.ஜி.,

மாணவர்களிடையே சகோதரத்துவம் வளரவேண்டும்: ஐ.ஜி.,

ADDED : ஆக 27, 2011 11:44 PM


Google News

தர்மபுரி: ''சகோதரத்துவம் வளர்ந்தால் மாணவர்கள் மத்தியில் ராக்கிங் கொடுமை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் உருவாகாது'' என கோவை மேற்கு மண்டல ஐ.ஜி., வன்னிய பெருமாள் பேசினார்.

தர்மபுரியில் நேற்று கல்லூரி மாணவர்கள் மத்தியில் ராக்கிங் கொடுமை தடுப்பு விழிப்புணர்வு கூட்டத்தில் அவர் பேசியதாவது: இந்திய அளவில் கல்லூரி மாணவர்கள் மத்தியில் ராக்கிங் செய்வது குறித்த பல்வேறு விழிப்புணர்வு மற்றும் தண்டனைகள் மூலம் ராக்கிங் கொடுமை குறைந்துள்ளது. இதுவரை ராக்கிங் கொடுமையால் 35 மாணவர்கள் இறந்துள்ளனர். மாணவர்கள் மத்தியில் சகோதரத்துவம் வளர்ந்தால், பல்வேறு பிரச்னைகள் உருவாகாது. படிக்கும் காலங்களில் கல்வியுடன் ஒழுக்கத்தையும் வளர்த்துகொள்ள வேண்டும். சமூகத்தில் பொறுப்புள்ள இளைஞர்கள் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக வளரவேண்டும். சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கல்லூரிகளில் ராக்கிங் கொடுமை இல்லை.ராக்கிங் தொடர்பான பெரிய அளவிலான வழக்குகள் பதிவாகவில்லை. மாணவர்கள் சிறந்த பண்புகளை வளர்த்துகொள்ள வேண்டும். சமூகத்துக்கு பெருமை தேடிதரவேண்டும். இவ்வாறு அவர் பேசினார். எஸ்.பி., கணேஷ்மூர்த்தி, தர்மபுரி மருத்துவ கல்லூரி முதல்வர் பாரதி, மருத்துவ கல்லூரி கண்காணிப்பாளர் செல்லப்பிள்ளை, உள்ளிருப்பு மருத்துவர் சுந்தரவதனம், டி.எஸ்.பி., சந்தானபாண்டியன், இன்ஸ்பெக்டர் சம்பத்குமார் உட்பட பலர் கலந்துகொண்டனர். முன்னதாக, ராக்கிங் தடுப்பு குறித்த விழிப்புணர்வு பேரணியை ஐ.ஜி., வன்னியப்பெருமாள் துவக்கிவைத்தார். 10க்கும் மேற்பட்ட கல்லூரிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் பேரணியில் கலந்து கொண்டனர்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us