ADDED : ஆக 27, 2011 11:45 PM
பொம்மிடி: இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனின், பொம்மிடி டாக்டர் முனிரத்தினம் ப்யூல்ஸ் சார்பில், வாடிக்கையாளர் சந்திப்பு கூட்டம் நடந்தது.
மண்டல மேலாளர் சுரேஷ்குமார் தலைமை வகித்தார். வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு சர்க்கரை அளவு பரிசோதனையும், ரத்த அழுத்தமும் பரிசோதிக்கப்பட்டது. சர்க்கரை நோய் உள்ள, 38 பேருக்கும், ரத்த அழுத்தம் உள்ள 28 பேருக்கும் ஆலோசனை வழங்கப்பட்டது. வாடிக்கையாளர்களுக்கு, 2டி ஆயில், இன்ஜின் ஆயில், பெட்ரோல் இலவசமாக வழங்கப்பட்டது. 48 வாகனங்களுக்கு இலவசமாக பேட்டரி பரிசோதனை செய்யப்பட்டது. நிகழ்ச்சியில், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் அதிகாரிகளும், பொதுமக்களும் திரளாக பங்கேற்றனர்.


