/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/அம்மி கல்லுக்கு வரவேற்பு குறைவு: கல் உடைப்பு தொழிலாளர் கலக்கம்அம்மி கல்லுக்கு வரவேற்பு குறைவு: கல் உடைப்பு தொழிலாளர் கலக்கம்
அம்மி கல்லுக்கு வரவேற்பு குறைவு: கல் உடைப்பு தொழிலாளர் கலக்கம்
அம்மி கல்லுக்கு வரவேற்பு குறைவு: கல் உடைப்பு தொழிலாளர் கலக்கம்
அம்மி கல்லுக்கு வரவேற்பு குறைவு: கல் உடைப்பு தொழிலாளர் கலக்கம்
ADDED : ஆக 27, 2011 11:56 PM
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்ட கிராமங்களில், கல்லில் தயார் செய்யப்படும் ஆட்டு கல், அம்மிகல் பயன்பாடு குறைந்து வருவதால், இதை நம்பியுள்ள தொழிலாளர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு கலாச்சாரம், மொழி பேசும் மக்கள் வசிக்கின்றனர். மாவட்டத்தில் ஓசூர், கிருஷ்ணகிரியை தவிர, 80 சதவீதம் கிராமங்கள் காணப்படுகிறது. கிராம புறங்களில் வசிக்கும் மக்கள், முழுக்க முழுக்க விவசாயம், விவசாயம் சார்ந்த கூலி வேலைகளில் ஈடுப்பட்டுள்ளனர். தமிழகத்தின் பிற மாவட்டங்களை போல், கிருஷ்ணகிரி மாவட்ட கிராமப்புற மக்களும் சமீப காலமாக, நவீன கலாச்சாரத்துக்கு தகுந்தாற்போல் வாழத் துவங்கியுள்ளனர். வீடுகளில் மாவு, மசாலா அரைப்பதற்கு கடந்த காலத்தில் அம்மிக்கல், உரல்கள் பயன்படுத்தப்பட்டது. தற்போது, மிக்சி, கிரைண்டர் வாங்கி பயன்படுத்துவது அதிகரித்து விட்டதால், அம்மிக்கல், உரல்களுக்கு மவுசு குறைந்து வருகிறது. அதனால், அம்மிக்கல், உரல்கள் தயாரிப்பு தொழிலில் ஈடுப்பட்ட வந்த தொழிலாளர்கள், கூலி வேலைக்கு செல்ல துவங்கியுள்ளனர். ஓசூர் தளி சாலையில் அம்மிக்கல், உரல் தயாரிப்பு பணியில் ஈடுப்பட்டுள்ள போச்சம்பள்ளியை சேர்ந்த மாணிக்கவாசம் கூறியதாவது: போச்சம்பள்ளி, ஊத்தங்கரை மற்றும் அரூர் பகுதியில் அம்மி, உரல் தயாரிப்பு தொழிலாளர்கள் ஏராளமானோர் உள்ளனர். இவர்கள், மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் முகாமிட்டு குடிசைத்தொழில் போல் அம்மி, உரல் தயாரித்து விற்பனை செய்கின்றனர். கடந்த காலத்தில் கிராம புறங்களில் திருமண தம்பதிக்கு சீதனமாக பெண் வீட்டார், அம்மிக்கல், உரல்களை வாங்கி கொடுக்கும் பழக்கம் அதிகமாக இருந்தது. தற்போது, அம்மி, உரல்களுக்கு பதில் மிக்சி, கிரைண்டர் வாங்கி கொடுக்கின்றனர். மிக்சி, கிரைண்டர் பயன்படுத்தும் கலாச்சாரம் அதிகரித்து விட்டது. அதனால், கடந்த காலத்தை போல் கிராமங்களில் அம்மிக்கல், உரல்களுக்கு வரவேற்பு இல்லை. தற்போது, கருல்கல் விலை உயர்ந்து விட்டதால், ஒரு அம்மி தயாரிக்கல 150 ரூபாயும், உரலுக்கு 250 ரூபாய் கொடுத்து கற்கள் வாங்க வேண்டி உள்ளது. அவற்றை செதுக்கி அழகுப்படுத்தும் கூலி சேர்த்து, 300 ரூபாய் முதல் 350 ரூபாய் ஆகிவிடுகிறது. அவற்றை மொத்தமாக மினி லாரிகளில் கொண்டு போய் கிராம புறங்களில் விற்பனை செய்ய வேண்டிய உள்ளது. கிராம புறத்தில் அம்மி, உரல்களுக்கு மவுசு குறைந்து விட்டதால், சில நேரத்தில் கற்கள் விலையும், வாடகை பணமும் கூட கிடைப்பதில்லை. அதனால், ஏராளமானோர் இந்த தொழிலை விட்டுவிட்டனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.


