ADDED : ஆக 27, 2011 11:57 PM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி புதிய வீட்டு வசதி வாரியத்தில் குடியிருப்போர் நலச்சங்கத்தின் சார்பில் மரக்கன்று நடும் விழா நடந்தது.
சங்க தலைவர் சக்கரைவேலு தலைமை வகித்தார். செயலாளர் தங்கவேலு முன்னிலை வகித்தார். டி.ஆர்.ஓ., பிரகாசம் மரக்கன்றுகளை நட்டு வைத்து சுற்று சூழலை பாதுகாப்பது குறித்து பேசினார். சங்க ஆலோசகர் ராஜாமணி, லட்சுமி நாராயணன், சக்கரபாணி, கோவிந்தராஜன், குப்புசாமி ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை பாஸ்கர், கிருஷ்ணன், ஸ்ரீராமுலு ஆகியோர் செய்திருந்தனர். சங்க பொருளாளர் ராஜகோபால் நன்றி கூறினார்.


