ADDED : ஆக 28, 2011 12:07 AM
விழுப்புரம் : கோலியனூர் மேற்கு ஒன்றிய பா.ம.க., பொது குழு கூட்டம் நடந்தது.ஒன்றிய செயலாளர் ரத்தினம் தலைமை தாங்கினார்.
மாவட்ட துணை தலைவர் ஆறுமுகம், முன்னாள் மாவட்ட துணை செயலாளர் பாலமுருகன், இளைஞர் சங்க தலைவர் தனஞ்செழியன், தொண்டர்படை தலைவர் ராஜா முன்னிலை வகித்தனர். ஒன்றிய தலைவர் ரமேஷ் வரவேற்றார். மாநில துணை பொதுச் செயலாளர் செந்தமிழ்செல் வன், துணை தலைவர்கள் தங்க ஜோதி, அன்புமணி, மாவட்ட செயலாளர் பழனிவேல், இளை ஞரணி செயலாளர் சிவக்குமார், மாநில செயற்குழு உறுப்பினர் அரிகரன் பேசினர். அனைத்து கிளைகளிலும் இளைஞ ரணி மற்றும் மகளிரணி சார்பில் 50 ஆயிரம் உறுப்பினர்கள் சேர்த்தல், உட்பட பல தீர்மானங்கள் நிறை @வற்றப்பட்டது.


