ADDED : ஆக 28, 2011 11:48 PM
கோவை : கோவை அம்மன் குளம் கொண்டசாமி லே-அவுட்டை சேர்ந்த மகேஸ்வரி மகள்
சித்ரா (19); தாமு நகர் அலமேலு மங்கம்மாள் லே-அவுட்டில் வசிக்கும்
செல்வராஜ் மகள் நாகஜோதி (17).
இருவரும், போத்தனூர் கல்லூரியில், பி.காம்.,
சி.ஏ., முதலாம் ஆண்டு படிக்கின்றனர். கடந்த 26ம் தேதி வழக்கம்போல்
கல்லூரிக்கு சென்ற தோழிகள் வீடு திரும்பவில்லை. சித்ராவின் தாயார்
மகேஸ்வரி, நாகஜோதியின் தந்தை செல்வராஜ் ஆகியோர் அளித்த புகாரின் பேரில்
ராமநாதபுரம் போலீசார், மாணவிகளை தேடுகின்றனர்.


