/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/கே.சி.டி., மேலாண்மை கல்லூரி மாணவர்களுக்கு வரவேற்பு விழாகே.சி.டி., மேலாண்மை கல்லூரி மாணவர்களுக்கு வரவேற்பு விழா
கே.சி.டி., மேலாண்மை கல்லூரி மாணவர்களுக்கு வரவேற்பு விழா
கே.சி.டி., மேலாண்மை கல்லூரி மாணவர்களுக்கு வரவேற்பு விழா
கே.சி.டி., மேலாண்மை கல்லூரி மாணவர்களுக்கு வரவேற்பு விழா
ADDED : ஆக 28, 2011 11:48 PM
சரவணம்பட்டி : ''ஆழ்ந்த தொழில்நுட்ப அறிவும், வெளி உலக வர்த்தக திறன்
தொடர்பும், நிறுவனங்களை நடத்துவோருக்கு வெற்றியைத் தேடித்தரும்,'' என,
ரூட்ஸ் மல்டி கிளீன் நிறுவனத்தின் சர்வதேச வர்த்தக பிரிவின் தலைவர்
ரியோடிஜர் ஷாரேடர் தெரிவித்தார்.
கோவை, சரவணம்பட்டி குமரகுரு தொழில்நுட்ப
கல்லூரியின் மேலாண்மை கல்லூரியில் மாணவர்கள் அறிமுக விழா நடந்தது. ரூட்ஸ்
மல்டி கிளீன் நிறுவனத்தின் சர்வதேச வர்த்தக பிரிவின் தலைவர் ரியோடிஜர்
öஷாரேடர் பேசியதாவது: வெறும் தொழில்நுட்ப அறிவை பெற்று, தொழிற்சாலையில்
மட்டுமே வேலை பார்க்க தற்போதைய இன்ஜினியர்கள் விரும்புவதில்லை. தொடர்ந்து
தொழில் நிறுவனங்களை உருவாக்கி அதில் வர்த்தகத்தை மேம்படுத்தி, சர்வதேச
தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ளவே விரும்புகின்றனர். இந்த சூழ்நிலையில்
வெறும் இன்ஜினியரிங் படிப்போடு நின்று விடாமல், மேலாண்மை கல்விக்கு
செல்கின்றனர். தற்போதைய தொழில் நிறுவனங்கள், தொடர்ந்து தொழில்நுட்ப
மேம்பாடு, திறமையான நிர்வாகத்தை நடத்த தேவையான அனைத்து முயற்சிகளையும்
மேற்கொண்டு வருகின்றன. இந்தியா, வரும் 2020ம் ஆண்டுக்குள் பொருளாதார வலிமை
மிக்க நாடாக மாறும். சமுதாய சிக்கல்களிலிருந்து விடுபடும்.இவ்வாறு, அவர்
பேசினார். கே.சி.டி., மேலாண்மை கல்லூரி தலைமை நிர்வாகி ராஜிவ் கெமினேனி,
முன்னிலை வகித்தார். இயக்குனர் விஜிலா கென்னடி வரவேற்றார்.


