/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/அரசு பள்ளி மாணவர்கள்போட்டிகளில் அசத்தல்அரசு பள்ளி மாணவர்கள்போட்டிகளில் அசத்தல்
அரசு பள்ளி மாணவர்கள்போட்டிகளில் அசத்தல்
அரசு பள்ளி மாணவர்கள்போட்டிகளில் அசத்தல்
அரசு பள்ளி மாணவர்கள்போட்டிகளில் அசத்தல்
ADDED : ஆக 28, 2011 11:48 PM
சிறுமுகை : மாவட்ட அளவில் நடந்த வினாடி வினா மற்றும் ஓவியப் போட்டிகளில்,
சிறுமுகை லிங்காபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்கள் முதலிடம்
பெற்றனர்.சிறுமுகை ஆலாங்கொம்பு ராகவேந்திரா வித்யாலயாவில் பள்ளி மாணவ,
மாணவியர்களுக்கு, தாலுகா அளவிலான ஓவியப்போட்டி நடந்தது.
இதில் லிங்காபுரம்
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவன் அனீஷ்குமார் முதலிடத்தையும், அருண்
இரண்டாமிடத்தையும் பெற்றனர். மேட்டுப்பாளையம் வனக்கல்லூரியில் ஒன்றிய
அளவிலும், வி.என்.கே., கலை அறிவியல் கல்லூரியில் மாவட்ட அளவிலும் வினாடி
வினா போட்டிகள் நடந்தன. இரண்டு போட்டிகளிலும் இப்பள்ளியை சேர்ந்த நிவாஷ்,
தமிழரசன், அருண் ஆகிய மூன்று மாணவர்கள் முதல் பரிசை பெற்றனர்.
வனக்கல்லூரியில் மாவட்ட அளவிலான ஓவியப் போட்டி நடந்தது. இதில் சிறுமுகை
லிங்காபுரம் பள்ளி மாணவி ரூபா முதலிடம் பெற்றார். போட்டிகளில் வெற்றி பெற்ற
மாணவ, மாணவிகளை பள்ளி தலைமை ஆசிரியர் கெஜலட்சமி, ஆசிரியர்கள் நேசமணி,
சிவக்குமார், ஆறுமுகம், ஜோதிமணி, சந்தான கிருஷ்ணன் ஆகியோர் பாராட்டினர்.


