/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/சாக்கடையை சீரமைத்து கான்கிரீட் ரோடு போட வலியுறுத்தல்சாக்கடையை சீரமைத்து கான்கிரீட் ரோடு போட வலியுறுத்தல்
சாக்கடையை சீரமைத்து கான்கிரீட் ரோடு போட வலியுறுத்தல்
சாக்கடையை சீரமைத்து கான்கிரீட் ரோடு போட வலியுறுத்தல்
சாக்கடையை சீரமைத்து கான்கிரீட் ரோடு போட வலியுறுத்தல்
ADDED : ஆக 29, 2011 12:06 AM
பொள்ளாச்சி : பொள்ளாச்சி நியூஸ்கீம் ரோட்டில் சாக்கடையை சீரமைக்காமல்
கான்கிரீட் ரோடு போடுவதால், தரம் கேள்விக்குறியாகி வருகிறது. பொள்ளாச்சி
நியூஸ்கீம் ரோடு மூன்று கோடி ரூபாய் மதிப்பில் கான்கிரீட் ரோடாக
மாற்றப்பட்டு வருகிறது. கடந்த பிப்ரவரி மாதம் துவங்கப்பட்ட பணிகள்,
நியூஸ்கீம் ரோட்டில் தெற்கு பகுதி மட்டும் முழுமையாக கான்கிரீட் ரோடாக
மாற்றப்பட்டுள்ளது. ரோட்டின் வடக்கு பகுதியில் இறுதி கட்டமாக
கான்கிரீட் அமைக்கும் பணி நடக்கிறது.பொதுமக்கள் கூறியதாவது:நியூஸ்கீம்
ரோட்டில் மருத்துவமனை, வங்கிகள், வர்த்தக கடைகள் அதிகளவில் உள்ளன. இந்த
ரோட்டை கடந்த எட்டு மாதங்களாக அடைத்து கான்கிரீட் ரோடு போடுகின்றனர். ரோடு
பணி நிறைவடைந்த இடத்தில் நடைபாதை கற்கள் பதிக்கப்படுகின்றன. ரோட்டின்
தெற்கு பகுதியில் பதிக்கப்பட்ட நடைபாதை கற்கள் இப்போதே பெயர்ந்து விட்டன.
ரோட்டின் வடக்கு பகுதியில் காந்திசிலை அருகில் கான்கிரீட் அமைக்கும் பணி
நடக்கிறது. இந்நிலையில், வடக்கு பகுதி ரோட்டில் நடைபாதை கற்கள் பதிக்கும்
இடத்தில் கான்கிரீட் கட்டை கட்டும் பணி நடக்கிறது. ரோட்டோரமுள்ள சாக்கடையை
தூர்வாரி சுத்தம் செய்யாமலும், உடைந்துள்ள சாக்கடை தடுப்பு சுவர்களை
சீரமைக்காமலும் கான்கிரீட் கட்டை அமைக்கும் பணி நடக்கிறது. உடைக்கப்பட்ட
சிலாப் கற்கள் சாக்கடை முழுவதும் ஆக்கிரமித்துள்ளதால் கழிவு நீர்
வெளியேறாமல் தேங்கியுள்ளது. நியூஸ்கீம் ரோட்டை கடக்கும் வகையில்
அமைக்கப்பட்டுள்ள சாக்கடையில் சிலாப்கள் உடைத்து அடைப்பை ஏற்படுத்தியுள்ளன.
இவற்றை அப்புறப்படுத்தாமல் கான்கிரீட் ரோடு மற்றும் நடைபாதை கற்கள்
பதிக்கப்படுகிறது. இதே நிலையில் ரோடு போட்டால் அடுத்த மழைக்கே
ரோட்டோரத்தில் உள்ள சாக்கடை உடைந்து கழிவு நீர் ரோட்டுக்கு வந்து விடும்.
பழைய ரோட்டை விட இந்த ரோடு உயர்த்தப்பட்டுள்ளதால், சாக்கடை கழிவு நீர்
முழுவதும் கடைகளுக்குள் புகுந்து விடும். நகராட்சி அதிகாரிகள் சாக்கடையை
தூர்வாரி சுத்தம் செய்த பிறகு, ரோடு போடுவதற்கும், நடைபாதை கற்கள்
பதிப்பதும் நடவடிக்கை வேண்டும்.இவ்வாறு, பொதுமக்கள் தெரிவித்தனர்.நகராட்சி
அதிகாரிகள் கூறுகையில், ''நியூ ஸ்கீம் ரோட்டில் இருபக்கமும் புதிதாக
சாக்கடை கட்டி, கான்கிரீட் ரோடு போட வேண்டும் என்ற நிபந்தனையுடன் பணி
ஒப்படைக்கப்பட்டுள்ளது. ரோட்டின் ஒரு பகுதியில் சாக்கடை கட்டி
முடிக்கப்பட்டு, ரோடும் போடப்பட்டுள்ளது. மறுபகுதியிலும் அதேபோன்று சாக்கடை
கட்டப்படும். சாக்கடையில் உள்ள கழிவுகள் முழுமையாக அகற்றப்படும்''
என்றனர்.


