Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/கட்டடப் பணியில்கிடைத்த சுவாமி சிலைகள்

கட்டடப் பணியில்கிடைத்த சுவாமி சிலைகள்

கட்டடப் பணியில்கிடைத்த சுவாமி சிலைகள்

கட்டடப் பணியில்கிடைத்த சுவாமி சிலைகள்

ADDED : ஆக 30, 2011 12:10 AM


Google News

குஜிலியம்பாறை;திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை அருகே, வீடு கட்டும் பணிக்காக, குழி தோண்டியபோது, பூமிக்குள் புதைந்திருந்த மூன்று ஐம்பொன் சுவாமி சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டன.

டி.கூடலூரைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் மகன் கிருஷ்ணன்,35, கரூர்-திண்டுக்கல் ரோட்டை ஒட்டிய நத்தமேட்டு பகுதியில், வீடு கட்டுவதற்காக குழி தோண்டினார். அதில், 9 செ.மீ., உயரமுள்ள விநாயகர், அம்மன், யானை சிலைகள், இரண்டு சங்குகள், உலோகத்தால் ஆன ஒரு ஸ்டாண்ட் இருந்தன. இப்பகுதியில், பழங்காலத்தில் கட்டப்பட்ட ஈஸ்வரன் கோவில், மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில், பூவாலம்மன் கோவில்கள் அருகருகே உள்ளன.வருவாய் ஆய்வாளர் பாபு கூறுகையில், ''சிலைகள் ஐம்பொன் அல்லது செம்பால் ஆனவையாக இருக்கலாம். தொல்பொருள் துறையினரின் ஆய்வுக்கு பிறகே, இதுகுறித்து தெரியவரும்'' என்றார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us