மதுரை மருத்துவக் கல்லூரியில் "ராகிங்' மூன்று கண்காணிப்பு குழுக்கள் அமைப்பு
மதுரை மருத்துவக் கல்லூரியில் "ராகிங்' மூன்று கண்காணிப்பு குழுக்கள் அமைப்பு
மதுரை மருத்துவக் கல்லூரியில் "ராகிங்' மூன்று கண்காணிப்பு குழுக்கள் அமைப்பு
ADDED : ஆக 30, 2011 12:29 AM
மதுரை : மதுரை மருத்துவ கல்லூரியில், 'ராகிங்' புகார் வந்ததை தொடர்ந்து, டீன் தலைமையில் மூன்று கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
எந்நேரமும் கல்லூரிக்குள் போலீசார் ரோந்து வந்து, கண்காணிக்கலாம் என, நிர்வாகம் அனுமதியளித்துள்ளது. இக்கல்லூரி முதலாமாண்டு மாணவர்களை, நான்காம் ஆண்டு மாணவர்கள், 'ராகிங்' செய்வதாக புகார் எழுந்தது. உதாரணமாக, முழுக்கை சட்டை அணிந்து, அதில் பட்டன் போடக்கூடாது, 'இன்' பண்ணக் கூடாது என, 'ராகிங்' செய்தனர். இது தொடர்பாக கல்லூரி நிர்வாகத்திற்கு இதுவரை எழுத்து பூர்வமாக, புகார் தெரிவிக்கப்படவில்லை. டீன் எட்வின்ஜோவுக்கு தகவல் கிடைத்ததை தொடர்ந்து, அவர் தலைமையில் மூன்று கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. டீன், பேராசிரியர்கள், விடுதி வார்டன்களை கொண்டவர்கள் ஒரு குழுவாகவும், உதவி பேராசிரியர்கள், சீனியர் மாணவர்கள் ஒரு குழுவாகவும், போலீஸ் அதிகாரிகள், வழக்கறிஞர், சமூக ஆர்வலர்கள் ஒரு குழுவாகவும் பிரிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் எந்நேரமும் கல்லூரிக்குள் 'விசிட்' செய்து கண்காணிக்கலாம் என, நிர்வாகம் அனுமதியளித்துள்ளது. போலீஸ் அதிகாரிகளில், யாரை இக்குழுவில் நியமிக்கலாம் என்பது குறித்து நேற்று கமிஷனர் கண்ணப்பனிடம், டீன் எட்வின்ஜோ ஆலோசனை நடத்தினார். இதை தொடர்ந்து, அண்ணாநகர் உதவி கமிஷனர் வெள்ளைத்துரையை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.


