Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/மூன்று பேர் தூக்கு தண்டனை குறித்து ரகசிய விசாரணை :அகதிகள் முகாமை விட்டு வெளியே செல்ல தடை

மூன்று பேர் தூக்கு தண்டனை குறித்து ரகசிய விசாரணை :அகதிகள் முகாமை விட்டு வெளியே செல்ல தடை

மூன்று பேர் தூக்கு தண்டனை குறித்து ரகசிய விசாரணை :அகதிகள் முகாமை விட்டு வெளியே செல்ல தடை

மூன்று பேர் தூக்கு தண்டனை குறித்து ரகசிய விசாரணை :அகதிகள் முகாமை விட்டு வெளியே செல்ல தடை

ADDED : ஆக 30, 2011 12:34 AM


Google News

ராமநாதபுரம்:முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில் மூவருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது குறித்து, அகதிகள் முகாமில் ஏதேனும் எதிர்ப்புகள் உள்ளதா, என 'கியூ' பிரிவு போலீசார் ரகசிய விசாரணை நடத்தி வருகின்றனர்.

முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்பினர், தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், மூவரின் தூக்கு தண்டனைக்கு தமிழகத்தில் உள்ள முகாமில் தங்கியுள்ள அகதிகள் மத்தியில் ஏதேனும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளதா? அகதிகள் 'பிட்' நோட்டீஸ் வினியோகம் செய்கின்றனரா, என 'கியூ' பிரிவு போலீசார் கண்காணித்து வருகின்றனர்.

கியூ பிரிவு அதிகாரி ஒருவர் கூறியதாவது:தூக்கு தண்டனை குறித்து அகதிகள் மத்தியில் எந்த எதிர்ப்பும் இல்லை. வழக்கம்போல் அவர்களது பணிகளை செய்து வருகின்றனர். மேலும் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட உள்ள செப்.,9க்கு முன், முகாம்களில், வருகை பதிவேட்டின்படி அகதிகள் அனைவரும் தங்கியுள்ளனரா, என சோதனை மேற்கொள்ளப்படும். இரண்டு தினங்கள் அகதிகள் வெளியே செல்ல தடைவிதிக்கப்படலாம், என்றார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us