Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/பஸ் ஸ்டாப் துவக்கம்

பஸ் ஸ்டாப் துவக்கம்

பஸ் ஸ்டாப் துவக்கம்

பஸ் ஸ்டாப் துவக்கம்

ADDED : ஆக 30, 2011 12:52 AM


Google News
அனுப்பர்பாளையம் : அனுப்பர்பாளையம் திலகர் நகர் பகுதியில் ஏற்படுத்தியுள்ள பஸ் ஸ்டாப்பை, வடக்கு தொகுதி எம்.எல்.ஏ., ஆனந்தன் துவக்கி வைத்தார்.அனுப்பர்பாளையம் திலகர் நகர் பகுதியில் பஸ் ஸ்டாப் ஏற்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

கோரிக்கையை ஏற்று பஸ் ஸ்டாப் அமைக்க போக்குவரத்து துறை அனுமதி அளித்தது.அதன் துவக்க விழாவுக்கு கவுன்சிலர் சுப்ரமணியம் தலைமை வகித்தார். அ.தி.மு.க., நகர செயலாளர் மணி வரவேற்றார். திருப்பூர் வடக்கு தொகுதி எம்.எல்.ஏ., ஆனந்தன், பஸ் ஸ்டாப் பெயர் பலகையை திறந்து வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.அ.தி.மு.க., மாவட்ட இலக்கிய அணி செயலாளர் ராதாகிருஷ்ணன், திருப்பூர் போக்குவரத்து கழக துணை மேலாளர் ராஜமாணிக்கம், உதவி பொறியாளர் ராமநாதன் உட்பட பலர் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us