ADDED : ஆக 30, 2011 12:54 AM
நெய்வேலி : நெய்வேலி அருகே கிணற்றில் இறந்து கிடந்த பள்ளி மாணவியின் தலை நேற்று இரவு கண்டெடுக்கப்பட்டது.
கடலூர் மாவட்டம், நெய்வேலி அடுத்த வானதிராயபுரத்தைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவரது மகள் கனிதா, 10. கடந்த 17ம் தேதி பள்ளிக்குச் சென்றவர் வீடு திரும்பவில்லை. நெய்வேலி டவுன்ஷிப் போலீசார் வழக்குப்பதிந்து சிறுமியைத் தேடி வந்தனர். இந்நிலையில் காணாமல் போன சிறுமி கனிதா உடல் தென்குத்து கிராமத்தில் ராஜ் என்பவர் வீட்டுக் கிணற்றில் அழுகிய நிலையில் நேற்று முன்தினம் மிதந்தது. தீயணைப்புத் துறையினர் உதவியுடன் உடலை மீட்டபோது தலை இல்லை. உடல் அழுகியதால் தலை கழன்று கிணற்றில் விழுந்திருக்கலாம் எனக் கருதினர். அதனையொட்டி, 50 ஆழமுள்ள கிணற்றில் இருந்த தண்ணீரை வெளியேற்ற தலையை தேடும் பணியில் போலீசார் இரண்டாவது நாளாக ஈடுபட்டனர். அப்போது துண்டிக்கப்பட்ட நிலையில் தலையை போலீசார் மீட்டனர். மேலும் சம்பவத்தன்று மாணவியை சைக்கிளில் அழைத்து சென்ற அய்யனாரை போலீசார் தொடர்ந்து தேடிவருகின்றனர்.


