/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/குண்டர் சட்டத்தில் ரவுடி அதிரடி கைதுகுண்டர் சட்டத்தில் ரவுடி அதிரடி கைது
குண்டர் சட்டத்தில் ரவுடி அதிரடி கைது
குண்டர் சட்டத்தில் ரவுடி அதிரடி கைது
குண்டர் சட்டத்தில் ரவுடி அதிரடி கைது
ADDED : செப் 01, 2011 11:21 PM
ஓசூர்: ஓசூரில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய ரவுடியை போலீஸார் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்தனர்.
அதே போல் மேலும் பல ரவுடிகளை கைது செய்து சிறையில் அடைக்க போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். ஓசூர் ராம்நகரை சேர்ந்தவர் ஆதில் (28). இவர் மீது இரு கொலை வழக்கு, வழிப்பறி, நிலமோசடி உள்ளிட்ட பல்வேறு வழக்குள் உள்ளன. கடந்த சில நாளுக்கு முன் போலீஸார் மிரட்டல் வழக்கு ஒன்றில் டவுன் போலீஸார் கைது செய்தனர். இவர் மீது ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளதால், இவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய எஸ்.பி., கண்ணன் கலெக்டர் மகேஸ்வரனுக்கு பரிந்தரை செய்தார். கலெக்டர் ஆதியை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து போலீஸார் ஆதியை குண்டர் சட்டத்தில் சேலம் சிறையில் அடைத்தனர்.
இதேபோல், ஓசூர் டவுன் போலீஸார் நகர பகுதிகளில் பல்வேறு சமூக விரோத செயல்களில் ஈடுபடும் ரவுடிகளை கணக்கு எடுத்து வருகின்றனர். அவர்களுடைய நடவடிக்கைகளை ரகசியமாக கண்காணித்து அவர்கள் மீதான புகார்களை தூசுதட்டி கைது செய்து குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். அதனால், உள்ளூர் ரவுடிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.


