ADDED : செப் 02, 2011 11:22 PM
ஊட்டி : உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட ஒரே நாளில் மட்டும் 145 பேர் விருப்ப மனு தாக்கல் செய்தனர்.
மாநிலம் முழுவதும் அடுத்த மாதம் நடக்கவுள்ள உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ளவர்களிடம் அ.தி.மு.க., சார்பில் நேற்று முதல் மனு பெறப்படுகிறது. நீலகிரி மாவட்டத்துக்கான விருப்ப மனுக்கள், ஊட்டி தமிழ்நாடு ஓட்டலில் பெறப்பட்டன.
மாநில உணவுத் துறை அமைச்சர் புத்தி சந்திரன், முன்னாள் அமைச்சர் மில்லர் முன்னிலையில், 9 பேர் நகராட்சி தலைவருக்கும், நகராட்சி வார்டு உறுப்பினருக்கு 36 பேரும், மாவட்ட கவுன்சிலருக்கு 4 பேரும், ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினருக்கு 30 பேரும், பேரூராட்சி மன்ற தலைவர் பதவிக்கு 10 பேரும், பேரூராட்சி வார்டு உறுப்பினருக்கு 50 பேர் என மொத்தம் 145 பேர் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்துள்ளனர். 'கட்சியினர் வரும் 8ம் தேதி வரை விருப்ப மனு தாக்கல் செய்யலாம்,' என அமைச்சர் புத்திசந்திரன் தெரிவித்தார்.


