/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/உள்ளாட்சி தேர்தலுக்கு அ.தி.மு.க., விண்ணப்பம்உள்ளாட்சி தேர்தலுக்கு அ.தி.மு.க., விண்ணப்பம்
உள்ளாட்சி தேர்தலுக்கு அ.தி.மு.க., விண்ணப்பம்
உள்ளாட்சி தேர்தலுக்கு அ.தி.மு.க., விண்ணப்பம்
உள்ளாட்சி தேர்தலுக்கு அ.தி.மு.க., விண்ணப்பம்
ADDED : செப் 02, 2011 11:58 PM
திண்டுக்கல் : உள்ளாட்சி பதவிகளுக்கு போட்டியிட அ.தி.
மு.க., நிர்வாகிகள் விண்ணப்பித்தனர். அ.தி.மு.க., சார்பில், உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவிக்கும் நபர்களிடம் இருந்து, மாவட்ட அலுவலகத்தில் மனுக்கள் பெறப்பட்டன. மாநில மீனவர் பிரிவு இணைச்செயலாளர் ஜெனிபர்சந்திரன், அமைச்சர் விசுவநாதன் மனுக்களை பெற்றனர்.நகராட்சி தலைவர், கவுன்சிலர், பேரூராட்சி தலைவர், மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர் ஆகிய பதவிகளுக்கு போட்டியிட அ.தி.மு.க., நிர்வாகிகள் விண்ணப்பித்தனர். திண்டுக்கல் நகராட்சி தலைவர் பதவிக்கு நகர் செயலாளர் ராமுத்தேவர், கவுன்சிலர் நாகராஜன், வக்கீல் மனோகரன்; பழநி நகராட்சி தலைவர் பதவிக்கு மகுடீஸ்வரன் உள்ளிட்டோர் விண்ணப்பித்தனர்.


