ADDED : செப் 02, 2011 11:59 PM
ரெட்டியார்சத்திரம் : ரெட்டியார்சத்திரத்தில் போலீஸ் ஸ்டேஷன், அடிப்படை வசதிகள் இல்லாமல் வாடகை கட்டடத்தில் இயங்குவதால் போலீசார் சிரமத்திற்குள்ளாகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் கடைசியாக திறக்கப்பட்ட ஸ்டேஷன், ரெட்டியார்சத்திரம் போலீஸ் ஸ்டேஷன். ஸ்டேஷன் திறக்கப்பட்டது முதல் பல ஆண்டுகளாக வசதிகளற்ற வாட கை கட்டடத்தில் இயங்கிவருகிறது. புதிய கட்டடம் கட்ட இது வரை மூன்று முறை இடம் தேர்வு செய்யப்பட்டு, அனுமதிக்காக அனுப்பப்பட்டது.ஆனால் மூன்று முறையும் தேர்தெடுக்கப்பட்ட இடம் போலீஸ் ஸ்டேஷன் கட்டுவதற்கு தகுதியற்றது, என நிராகரிக்கப்பட்டது. ரெட்டியார்சத்திரத்தில் போலீஸ் ஸ்டேஷன் அமைக்கப்பட்டது முதல், கோபிநாத சுவாமி கோயிலுக்கு சொந்தமான கட்டடத்தில் இயங்கிவருகிறது. இங்கு போதிய இடவசதி இல்லை. கைது செய்யப்படும் குற்றவாளிகளை பாதுகாப்பாக வைப்பதிலும் சிரமம் உள்ளது. விசாரணைக்கு அழைத்து வருபவர்களையும் விசாரிக்க போதுமான இடவசதி இல்லை. ரெட்டியார்சத்திரம் போலீஸ் ஸ்டேஷனுக்கு சொந்த கட்டடம் கட்ட, விரைவில் இடம் தேர்வு செய்து நிதிஒதுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


