ADDED : செப் 03, 2011 11:54 PM
திருநெல்வேலி : பாளை.யில் மாயமான பிளஸ் 2 மாணவனை போலீசார் தேடிவருகின்றனர்.
பாளை.,இந்திரா நகரை சேர்ந்தவர் சவுந்திரராஜன் மகன் மகாராஜா என்ற குமார்(20). பிளஸ்2 மாணவன். இவர் ஊட்டியில் உள்ள தனது சித்தப்பா வீட்டிற்கு சென்றுவிட்டு வருவதாக கூறி கடந்த 26ம் தேதி மகராஜா வீட்டை விட்டு சென்றார். ஆனால் அவர் கூறியபடி ஊட்டிக்கு செல்லவில்லை. அவரது பெற்றோர்கள் தனது உறவினர் வீடுகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேடினர். எங்கு தேடியும் மாணவன் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவரது தந்தை சவுந்திரராஜன் தனது மகனை கண்டுபிடித்து தரும்படி பாளை.போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான மகராஜனை தேடிவருகின்றனர்.


