கமுதி அருகே டிபன்பாக்ஸ் குண்டு வெடித்ததால் பரபரப்பு
கமுதி அருகே டிபன்பாக்ஸ் குண்டு வெடித்ததால் பரபரப்பு
கமுதி அருகே டிபன்பாக்ஸ் குண்டு வெடித்ததால் பரபரப்பு
UPDATED : செப் 04, 2011 11:22 AM
ADDED : செப் 04, 2011 09:28 AM
கமுதி: கமுதி அருகே வீட்டின் மீது டிபன்பாக்ஸ் குண்டு வீசியதில் வெடித்து சிதறியதால் பரபரப்பு ஏறப்ட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள கே. வேப்பங்குளத்தில் குடும்பத்தகராறு காரணமாக ஒரு வீட்டில் மீது சில மர்ம நபர் டிபன்பாக்ஸ் வெடிகுண்டினை வீசியுள்ளார். மொத்தம் 3 குண்டுகள் வெடித்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சம்பவ அறிந்த போலீசார் கே..வேப்பங்குளம் விரைந்து சென்றுள்ளனர். சம்பவ இடத்தில்
போலீசார் நடத்திய விசாரணையில் , கே.வேப்பங்குளத்தைச் சேர்ந்த பால்சாமியின் மனைவி ஈஸ்வரிக்கும் (38) அவரது தம்பி இருளாண்டிக்கும் (32) பணம் கொடுக்கல்- வாங்கலில் தகராறு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த இருளாண்டி இன்று அதிகாலை தனது அக்கா ஈஸ்வரி வீட்டின் மீது டிபன்பாக்ஸ் வெடிகுண்டினை வீசியுள்ளார். இதில் மூன்று வெடித்து சிதறியது. இந்த குண்டுவெடிப்பில் பக்கத்துவீட்டுச்சுவர் இடிந்துவிழுந்ததாக கூறப்படுகிறது. மேலும் ஒன்று வெடிக்காமல் கிடந்தது. அதன் மீது போலீசார் முட்செடிகளை மூடி பாதுகாத்து வருகிறது. வெடிகுண்டு செயலழிக்க செய்யும் போலீஸ் படையும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளனர்.தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


