டில்லி போலீசில் 85,000 வழக்குகள் பென்டிங்
டில்லி போலீசில் 85,000 வழக்குகள் பென்டிங்
டில்லி போலீசில் 85,000 வழக்குகள் பென்டிங்

புதுடில்லி: தலைநகரான டில்லியில் குற்றச்செயல்கள் அதிகரித்துள்ள நிலையில் முடிக்கப்படாமல் 47 சதவீத வழக்குகள் நிலுலையில் இருப்பதாக டில்லி போலீசார் கவலை தெரிவித்துள்ளனர். தடயவியல் முடிவு வருவதில் தாமதம் மற்றும் புகார்தாரர்களின் ஒத்துழைப்பு குறைபாடு உள்ளிட்ட விஷயங்களினால் பல்வேறு வழக்குகள் தீர்க்கப்டாமல் இருக்கின்றன.
இது குறித்து ஒரு உயர் போலீஸ் அதிகாரி தெரிவிக்கையில்: கடந்த 2008 முதல் நடப்பாண்டு ஜூலை 31 ம் தேதி வரை ஒரு லட்சத்து 81 ஆயிரத்து 797 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 96 ஆயிரத்து 201 வழக்குகள் ( 47. 8 சதவீதம் ) தீர்க்கப்பட்டுள்ளன. இன்னும் 85 ஆயிரத்து 596 வழக்குகள் நிலுவையில் உள்ளன.
நடப்பாண்டில் கடந்த 7 மாதத்தில் மட்டும் 30 ஆயிரத்து 904 வழக்குகள் பதிவாகின. இதில் 13 ஆயிரத்து 764 வழக்குகள் முடிக்கப்பட்டுள்ளன. கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் 4 ஆயிரத்து 834 வழக்குகள் பதியப்பட்டன. இதில் 2 ஆயிரத்து 404 வழக்குகள் முடிக்கப்பட்டுள்ளன.
குற்றவாளிகள் கைது செய்யப்படுவது , தடயவியல் ஆய்வு முடிவு வருவன உள்ளிட்டவைகளில் வழக்குகள் தீர்ப்பதில் காலதாமதம் ஏற்படுகிறது.


