/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/உயர் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு பயிற்சிஉயர் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு பயிற்சி
உயர் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு பயிற்சி
உயர் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு பயிற்சி
உயர் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு பயிற்சி
ADDED : செப் 04, 2011 11:29 PM
திருக்கோவிலூர் : திருக்கோவிலூர் வட்டார வளமையத்தில் உயர் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கான படைப்பாற்றல் பயிற்சி முகாம் நடந்தது.
திருக்கோவிலூர் ஆண்கள், பெண்கள் மேல்நிலைப் பள்ளி, திருப்பாலப்பந்தல் மேல்நிலைப் பள்ளிகளில் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப் பட்டது. மேற்பார்வையாளர் சிவசுப்ரமணியன் பயிற்சியை துவக்கி வைத் தார். உதவி தொடக்கக் கல்வி அலுவலர் கண்ணன் முன்னிலை வகித்தார். கருத்தாளர்கள் செல்வகுமார், மகாலட்சுமி, லோக்யாபட்டேல் மற்றும் ஆசிரியர் பயிற்றுனர்கள் ரஞ்சனிதேவி, பிரேமா, விஜய்குமார் பயிற்சி அளித்தனர். புதிய பாடதிட்டத்தின்படி ஆசிரியர்கள் நான்கு குழுக்களாக பிரிந்து படைப்பாற்றல் கல்விக்கான மாதிரி பாடதிட்டத்தினை தயார் செய்தனர். இதில் ஒன்றியத்தை சேர்ந்த 163 ஆசிரியர்கள் பயிற்சி பெற்றனர்.


