/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/மணல் கடத்திய டயர் வண்டிகள் பறிமுதல்மணல் கடத்திய டயர் வண்டிகள் பறிமுதல்
மணல் கடத்திய டயர் வண்டிகள் பறிமுதல்
மணல் கடத்திய டயர் வண்டிகள் பறிமுதல்
மணல் கடத்திய டயர் வண்டிகள் பறிமுதல்
ADDED : செப் 04, 2011 11:29 PM
சங்கராபுரம் : மணல் கடத்திய 3 டயர் வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது.
சங்கராபுரம் வட்டம் சு.கள்ளிப்பாடி கிராமத்தில் தாசில்தார் கோகுலபத்மநாபன், துணை தாசில்தார் பாலசுப்ரமணியன் ரோந்து சென்றனர். அப்போது ஆற்றிலிருந்து அனுமதியின்றி மணல் கடத்தி வந்த 3 டயர் வண்டிகள் மற்றும் கிராமத்தில் தனியார் இடத்தில் அனுமதி பெறாமல் வைத்திருந்த 19 யூனிட் மணல் ஆகியவற்றை தாசில்தார் பறிமுதல் செய்தார்.


