Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/விழுப்புரம் நகராட்சி விரிவாக்கம்... உள்ளாட்சி தேர்தலில் இடம்பெறுமா?

விழுப்புரம் நகராட்சி விரிவாக்கம்... உள்ளாட்சி தேர்தலில் இடம்பெறுமா?

விழுப்புரம் நகராட்சி விரிவாக்கம்... உள்ளாட்சி தேர்தலில் இடம்பெறுமா?

விழுப்புரம் நகராட்சி விரிவாக்கம்... உள்ளாட்சி தேர்தலில் இடம்பெறுமா?

ADDED : செப் 04, 2011 11:31 PM


Google News

விழுப்புரம் : விழுப்புரம் நகராட்சி விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள பகுதிகள் வரும் உள் ளாட்சி தேர்தலில் இடம் பெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

விழுப்புரம் நகராட்சி ஒரு லட்சம் மக்கள் தொகை யுடன் தேர்வு நிலை நகராட்சியாக செயல்பட்டு வருகிறது. நகர்புறத்தையொட்டிய கிராமப் பகுதிகள் வரை புதிய குடியிருப்புகள் அதிகரித்த நிலையில் அடிப்படை வசதிகளின்றி நெருக்கடியான நிலை தொடர்ந்து வருகிறது. இதனால் புறநகர் பகுதியில் விரிவடைந்துள்ள குடியிருப்புகளை ஒருங்கிணைக்கும் வகையில் கருத்துகள் கேட்கப்பட்டு அருகே உள்ள ஊராட்சிப் பகுதிகள் நகராட்சியுடன் இணைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதன்படி நகரைச் சுற்றியுள்ள சாலாமேடு, வழுதரெட்டி, காகுப்பம், எருமனந்தாங்கல், பானாம்பட்டு ஆகிய ஊராட்சிப் பகுதிகள் நகராட்சியுடன் இணைக்கப்பட்டது. காகுப்பம், வழுதரெட்டி ஆகிய ஊராட்சியில் எதிர்ப்புகள் இருந்த நிலையில் நகராட்சி விரிவாக்கம் செய்து அரசாணை வெளியிடப்பட்டது. இதனையடுத்து 36 வார்டுகளாக இருந்த விழுப்புரம் நகராட்சி 42 வார்டுகளாக விரிவாக்கம் செய்யப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ளதால், அதற்கான ஆயத்தப் பணிகள் துவங்கியுள்ளது. அ.தி.மு.க.,-தே.மு.தி.க., மற்றும் தி.மு.க., உள்ளிட்ட முக்கிய அரசியல் கட்சிகள் சார்பில் விருப்ப மனுக்கள் பெறப்பட்டு வருகிறது. நகராட்சி வார்டு கவுன்சிலர்கள், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள், மாவட்ட கவுன்சிலர்கள், பேரூராட்சி கவுன்சிலர்கள், சேர்மன்களுக்கு போட்டியிட விருப்ப மனுக்கள் பெறப்பட்டு தேர்தல் பணிகள் துவங்கியுள்ளது. இதற்கிடையே விழுப்புரத்தில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள 42 நகராட்சி வார்டுகளுக்கும் சேர்த்து உள்ளாட்சி தேர்தல் நடக்குமா அல்லது வழக்கம் போல் 36 வார்டுக்கு மட்டும் தேர்தல் நடக்குமா என முடிவு தெரியாத நிலை உள்ளது. இதனால் விழுப்புரம் நகராட்சியுடன் இணைக்கப்பட்டுள்ள சாலாமேடு, வழுதரெட்டி உள்ளிட்ட கிராம ஊராட்சித் தரப்பினர் வார்டு கவுன்சிலர்களுக்கு போட்டியிடுவதா, ஊராட்சி கவுன்சிலருக்கு போட்டியிடுவதா, ஊராட்சி தலைவராக போட்டியிட தயாராவதா என்ற குழப்பத்தில் உள்ளனர். கட்சியில் விருப்ப மனுக்கள் பெறப்படுவதால் இவர்கள் தேர்தல் ஆணையத்தின் தெளிவான அறிவிப்பை எதிர்பார்த்து காத்துள்ளனர்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us