Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/பைக்காரா அணை நிரம்பியது:வெள்ள அபாய எச்சரிக்கை

பைக்காரா அணை நிரம்பியது:வெள்ள அபாய எச்சரிக்கை

பைக்காரா அணை நிரம்பியது:வெள்ள அபாய எச்சரிக்கை

பைக்காரா அணை நிரம்பியது:வெள்ள அபாய எச்சரிக்கை

ADDED : செப் 04, 2011 11:35 PM


Google News
Latest Tamil News

ஊட்டி:நீலகிரியில் தொடரும் மழையால், அணைகள் நிரம்பியுள்ளன.

பைக்காரா அணை முழு அளவை எட்டியதால், வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில், கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. அணைகள் முழு அளவை எட்டியுள்ளன. சில அணைகளில், நீர் மட்டம் அபாய கட்டத்தை தாண்டியுள்ளதால், நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. பைக்காரா அணை முழு அளவை எட்டியதால், அணையிலிருந்து தண்ணீரை மின் வாரியத்தினர் வெளியேற்றி வருகின்றனர்.



பைக்காரா அணை, பைக்காரா ஆற்றுப்படுகை மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு, தண்டோரா மூலம் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

கடந்த சனிக்கிழமை, அவலாஞ்சியில், அதிகப்பட்சமாக, 100 மி.மீ., மழை பதிவாகியிருந்தது. அப்பர்பவானியில், 90 மி.மீ., எமலரால்டில், 45, தேவாலாவில், 36, நடுவட்டத்தில், 28.5, கூடலூரில், 17, கிளன்மார்கனில், 12, கேத்தியில், 8, ஊட்டியில், 6.2, குந்தாவில், 6, கெத்தையில், 4.5, குன்னூரில், 2.8, கல்லட்டியில், 2.4, கோத்தகிரி, கோடநாடு மற்றும் பர்லியாற்றில், 2, மற்றும் கிண்ணக்கொரையில், 1 மி.மீ., மழை பதிவாகியது.மழையின் காரணமாக, கூடலூர் கீழ் நாடுகாணி பகுதியில், 20 இடங்களில் மண் சரிவு ஏற்பட்டு, பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. நீர்மட்டம் என்ற பகுதியில் சாலையில் பிளவு ஏற்பட்டுள்ளது.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us