ADDED : செப் 06, 2011 01:24 AM
புதுச்சேரி: செய்தி மற்றும் விளம்பரத் துறை உதவி இயக்குனருக்கு பிரிவு உபசார விழா நடந்தது.
புதுச்சேரி அரசின் செய்தி மற்றும் விளம்பரத் துறையில் உதவி இயக்குனராக(முறைவைப்பு) பணியாற்றிய ராஜேந்திரன், கடந்த 31ம் தேதி ஓய்வு பெற்றார். அவருக்கு செய்தித் துறை அலுவலகத்தில் நேற்று மாலை பிரிவுபசார விழா நடந்தது. இயக்குனர் செல்வராஜ் வாழ்த்தி பேசினார். உதவி இயக்குனர் தோமினிக் சேவியர் (பத்திரிக்கை பிரிவு), இளநிலைப் பொறியாளர் பிரபாவதி, கண்காணிப்பாளர் ஏழுமலை, மக்கள் தொடர்பு அலுவலர்கள் குலசேகரன், பாலாஜி, கணபதி ஆகியோர் ராஜேந்திரனின் பணியை பாராட்டி பேசினர். ராஜேந்திரன் ஏற்புரையாற்றினார். பின்னர் அவருக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.


