Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/தேவகோட்டை, மானாமதுரையில் ஏ.எஸ்.பி., டி.எஸ்.பி., நியமனம்

தேவகோட்டை, மானாமதுரையில் ஏ.எஸ்.பி., டி.எஸ்.பி., நியமனம்

தேவகோட்டை, மானாமதுரையில் ஏ.எஸ்.பி., டி.எஸ்.பி., நியமனம்

தேவகோட்டை, மானாமதுரையில் ஏ.எஸ்.பி., டி.எஸ்.பி., நியமனம்

ADDED : செப் 07, 2011 12:04 AM


Google News

சிவகங்கை : காஞ்சிபுரத்தில் பயிற்சியில் இருந்த எஸ்.

சமன்ந்த்ரோஷன் ராஜேந்திரா, தேவகோட்டை ஏ.எஸ்.பி.,யாக பொறுப்பேற்றார்.தேவகோட்டை சப்- டிவிஷனில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும், நகைக்கடை, வீடுகளில் நடக்கும் திருட்டு,கொள்ளையை தடுக்க, இங்கு, ஐ.பி.எஸ்., அந்தஸ்தில் ஏ.எஸ்.பி., நியமிக்கப்பட்டுள்ளார். கடைசியாக, அஸ்வின்கோட்னீஸ் இங்கு ஏ.எஸ்.பி.,யாக இருந்தார். அவருக்கு பின், டி.எஸ்.பி.,க்களே இருந்தனர். இதனால், இங்கு தீவிர கண்காணிப்பு இன்றி தேவகோட்டை, காரைக்குடி பகுதியில் கொள்ளை, திருட்டு சம்பவங்கள் அரங்கேறியது. குறிப்பாக உள்துறை அமைச்சர் சிதம்பரம் பங்காளிகள் வீடுகளிலேயே பல லட்சம் மதிப்பிலான வெள்ளி பொருட்கள் திருடப்பட்டது. இது போன்று திருட்டுக்களை தடுக்கும் வகையில், இங்கு ஐ.பி.எஸ்., அந்தஸ்தில் அதிகாரியை நியமிக்க அரசு முடிவு செய்து காஞ்சிபுரத்தில் பயிற்சியில் இருந்த, எஸ். சமன்ந்த்ரோஷன் ராஜேந்திராவை, தேவகோட்டை ஏ.எஸ்.பி.,யாக நியமித்து, உள்துறை செயலாளர் ரமேஸ்ராம் மிஸ்ரா உத்தரவிட்டார். நேற்று அவர் தேவகோட்டையில் பொறுப்பேற்றார்.மானாமதுரை சப் டிவிஷன் டி.எஸ்.பி.,யாக இருந்த கண்ணன், அருப்புக்கோட்டைக்கு மாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பின், இங்கு டி.எஸ்.பி., பணியிடம் நிரப்பபடவில்லை. திருநெல்வேலி தனிப்பிரிவு (ஐ.எஸ்) உதவி கமிஷனராக இருந்த எஸ்.லயோலா இக்னேஷியஸ், மானாமதுரைக்கு மாற்றம் செய்யப்பட்டு, அவரும் நேற்று பொறுப்பேற்றார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us