/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/தரமில்லாத சிமென்ட் ரோடு கான்ட்ராக்டர் மீது நடவடிக்கைதரமில்லாத சிமென்ட் ரோடு கான்ட்ராக்டர் மீது நடவடிக்கை
தரமில்லாத சிமென்ட் ரோடு கான்ட்ராக்டர் மீது நடவடிக்கை
தரமில்லாத சிமென்ட் ரோடு கான்ட்ராக்டர் மீது நடவடிக்கை
தரமில்லாத சிமென்ட் ரோடு கான்ட்ராக்டர் மீது நடவடிக்கை
ADDED : செப் 07, 2011 12:04 AM
காரைக்குடி : பல லட்ச ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட ரோடு பணி தரமின்றி நடந்துள்ளதால் கான்ட்ராக்டர் மீது நடவடிக்கை எடுக்க கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.காரைக்குடி நகராட்சி கூட்டத்திற்குதலைவர் முத்துத்துரை தலைமை வகித்தார்.
கமிஷனர் (பொறுப்பு) மணி முன்னிலை வகித்தார்.கூட்டத்தில் நடந்த விவாதங்கள்:காங்., கவுன்சிலர் ராமசாமி பேசுகையில், '' காரைக்குடி நகரில் நாய்களின் இனப்பெருக்கம் அதிகரித்து கொண்டே செல்கிறது என்றார். தலைவர், முத்துத்துரை பேசுகையில், '' தெரு நாய்களுக்கு கு.க., ஆபரேஷன் செய்தும், இதுபோல் அதிகரித்துள்ள காரணத்தை அறிந்து குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார். கவுன்சிலர்களின் கேள்வி நேரத்தின்போது கூட்டத்தை விட்டு வெளியே சென்ற கமிஷனரை, தலைவர் கடிந்தார். கடைசி கூட்டம் என்பதால், அ.தி.மு.க., கவுன்சிலர் கணேசன், தலைவரின் செயல்பாடுகள் குறித்து பாராட்டினார். பல லட்ச ரூபாய் செலவில் போடப்பட்ட 'சிமென்ட் ரோடு' மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன. சம்பந்தப்பட்ட கான்ட்ராக்டர் மீது நடவடிக்கை எடுப்பதோடு, இதற்குரிய தொகையையும் நிறுத்தி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஒட்டு மொத்த கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்கு பதிலளித்து பேசிய, கமிஷனர், ''கான்ட்ராக்டர் தொகையில் 5 சதவீத பணம் அபராதமாக பிடித்தம் செய்யப்பட்டுள்ளது'' என்றார். தவிர, காரைக்குடி நூறடி ரோட்டில் விஸ்தரிப்பு பணிக்காக மரங்கள் வெட்டுவதற்கு ஒட்டு மொத்த கவுன்சிலர்களிடம் எதிர்ப்பு கிளம்பியது. துணை தலைவர் வைரவன் நன்றி கூறினார்.


