/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/சுரங்கப்பாதை அமைக்க மா.கம்யூ., வலியுறுத்தல்சுரங்கப்பாதை அமைக்க மா.கம்யூ., வலியுறுத்தல்
சுரங்கப்பாதை அமைக்க மா.கம்யூ., வலியுறுத்தல்
சுரங்கப்பாதை அமைக்க மா.கம்யூ., வலியுறுத்தல்
சுரங்கப்பாதை அமைக்க மா.கம்யூ., வலியுறுத்தல்
ADDED : செப் 07, 2011 12:10 AM
கோவை : ''பொதுமக்கள் விபத்துகளில் சிக்காமல், உயிரிழப்பு ஏற்படாத வகையில் சுரங்கம், இரும்புபால நடைபாதை அமைக்க வேண்டும்,'' என மா.
கம்யூ., வலியுறுத்தி உள்ளது. மா.கம்யூ., கட்சியின் சிங்காநல்லூர் கமிட்டிக்குட்பட்ட பி.ஆர்., புரம் கிளை மாநாடு நடந்தது. கிளையின் புதிய செயலாளராக குமரவேல் தேர்ந்தெடுக்கப்பட்டார். மாவட்ட தலைவர்கள் மனோகரன், தெய்வேந்திரன், மாணிக்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில், நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: அவிநாசி ரோட்டில் பாதசாரிகள், பொதுமக்கள் விபத்துகளில் சிக்காமல், உயிரிழப்பு ஏற்படாத வகையில் சுரங்கம், இரும்பு பால நடைபாதை அமைக்க வேண்டும். பி.ஆர்., புரம் பகுதியில் பழுதான சாக்கடைகளை சீர்படுத்த வேண்டும். ஹோப் காலேஜ்- விளாங்குறிச்சி ரோட்டை அகலப்படுத்த வேண்டும், ரயில்வே மேம்பால பணிகளை உடனே துவங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


