Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ஏரியில் மூழ்கி நான்கு மாணவர்கள் பலி

ஏரியில் மூழ்கி நான்கு மாணவர்கள் பலி

ஏரியில் மூழ்கி நான்கு மாணவர்கள் பலி

ஏரியில் மூழ்கி நான்கு மாணவர்கள் பலி

ADDED : செப் 07, 2011 12:13 AM


Google News

திருக்கோவிலூர் : திருக்கோவிலூர் அருகே பள்ளி மாணவர்கள் நான்கு பேர் ஏரியில் மூழ்கி இறந்த சம்பவம் கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் அடுத்த வீரபாண்டி காலனியை சேர்ந்தவர் ஏழுமலை. சென்னையில் கூலி வேலை செய்கிறார். இவரது மனைவி லட்சுமி, உறவினர் விசேஷத்திற்காக நேற்று முன்தினம் சென்னை சென்றிருந்தார். வீட்டில் இருந்த ஏழுமலையின் மகள் திவ்யா,11 பள்ளிக்கு செல்லாமல், ஊரில் இருந்து வந்திருந்த திருமலைப்பட்டு கிராமத்தை சேர்ந்த அவரது அத்தை மகன் குணா,10, சினேகா,9 மற்றும் பெங்களூருவில் வசிக்கும் மற்றொரு அத்தை மகன் சிவக்குமார்,12, மகாலட்சுமி,23 ஆகியோருடன் அருகில் உள்ள புலிக்கல் ஏரிக்கு நேற்று மாலை 3.30 மணிக்கு குளிக்கச் சென்றார்.



நான்கு பேரும் ஏரி பள்ளத்தில் மூழ்கி உயிருக்கு போராடியதை பார்த்த மகாலட்சுமி காலனிக்குள் ஓடி சென்று கூறினார். அதற்குள் நான்கு பேரும் நீரில் மூழ்கிவிட்டனர். அவர்களது உடலை பொதுமக்கள் மீட்டனர். இச்சம்பவத்தால் கிராமமே சோகத்தில் மூழ்கியது. இறந்த சிறுவர்கள் மூன்றுபேர் வெளியூர் என்பதால் விலாசத்தை அறிந்து கொள்வதிலும், உறவினர்களுக்கு தகவல் தெரிவிப்பதிலும் சிக்கல் ஏற்பட்டது. தகவலறிந்த டி.எஸ்.பி., லோகநாதன், இன்ஸ்பெக்டர் கண்ணன், சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றுவிசாரணை மேற்கொண்டனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us