/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ஓசூர் நகராட்சியில் பெண்களுக்கு கூடுதல் இடம் : வாய்ப்பு கிடைக்காமல் ஏக்கம்ஓசூர் நகராட்சியில் பெண்களுக்கு கூடுதல் இடம் : வாய்ப்பு கிடைக்காமல் ஏக்கம்
ஓசூர் நகராட்சியில் பெண்களுக்கு கூடுதல் இடம் : வாய்ப்பு கிடைக்காமல் ஏக்கம்
ஓசூர் நகராட்சியில் பெண்களுக்கு கூடுதல் இடம் : வாய்ப்பு கிடைக்காமல் ஏக்கம்
ஓசூர் நகராட்சியில் பெண்களுக்கு கூடுதல் இடம் : வாய்ப்பு கிடைக்காமல் ஏக்கம்
ADDED : செப் 07, 2011 02:40 AM
ஓசூர் :உள்ளாட்சி தேர்தலில் பஞ்சாயத்துகளை உள்ளடக்கிய, ஓசூர் புதிய
நகராட்சியில் மொத்தம் உள்ள, 45 வார்டில் பெண்களுக்கு, 15 வார்டுகள்
ஒதுக்கப்பட்டுள்ளது.மேலும், பழைய நகராட்சியில் உள்ள, 22 வார்டில், 10
வார்டுகள் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதால், 'சிட்டிங்'
கவுன்சிலர்கள் பலர் போட்டியிட வார்டுகள் கிடைக்காமல் கலக்கம்
அடைந்துள்ளனர். ஓசூர் நகராட்சியுடன், மூக்கண்டப்பள்ளி, ஜுஜுவாடி,
ஆவலப்பள்ளி, சென்னத்தூர் மற்றும் மத்திகிரி டவுன் உள்ளிட்ட புறநகர்
பஞ்சாயத்துகள் இணைக்கப்பட்டுள்ளன. இதனால், நகராட்சி வார்டுகள், 30லிருந்து,
45 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஜுஜுவாடி பஞ்சாயத்தில் உள்ள, 2வது வார்டு
புதிய நகராட்சியின் ஒன்றாவது வார்டாகவும், ஒன்றாவது வார்டு, நகராட்சியின்
2வது வார்டாகவும், 3,4,5 வார்டுகள், நகராட்சியில், அதே 3,4,5வது வார்டாக
தொடர்கின்றன. ஆவலப்பள்ளி பஞ்சாயத்து, மூன்றாவது வார்டு, புதிய
நகராட்சியில், ஆறாவது வார்டாகவும், ஒன்றாவது வார்டு, 7வது வார்டாகவும்,
2வது வார்டு, 8வது வார்டாகவும், 4வது வார்டு, 9வது வார்டாகவும்
மாற்றப்பட்டுள்ளது. ஓசூர் பழைய நகராட்சியில் இருந்த, 3வது வார்டு, புதிய
நகராட்சியில், 10வது வார்டாகவும், 2வது வார்டு, 11வது வார்டாகவும்,
ஒன்றாவது வார்டு, 12வது வார்டாகவும் மாற்றப்பட்டுள்ளன. மூக்கண்டப்பள்ளி
பஞ்சாயத்தில் உள்ள, 5வது வார்டு நகராட்சியின் 13வது வார்டாகவும், நான்காவது
வார்டு, 14வது வார்டாகவும், 2வது வார்டு, 15வது வார்டாகவும், ஒன்றாவது
வார்டு, 16வது வார்டாகவும், 3வது வார்டு, 17வது வார்டாகவும்
மாற்றப்பட்டுள்ளன. பழைய நகராட்சியில் இருந்த, 30 வது வார்டு புதிய
நகராட்சியில், 18வது வார்டாகவும், 29வது வார்டு, 19வது வார்டாகவும், 28வது
வார்டு, 20வது வார்டாகவும், 9,10,11 ஆகிய வார்டு இணைக்கப்பட்டு புதிய
நகராட்சியில், 21வது வார்டாகவும், 7,8 வார்டுகள் இணைக்கப்பட்டு, 22வது
வார்டாகவும் மாற்றப்பட்டுள்ளன. ஐந்தாவது, ஆறாவது வார்டு இணைத்து, 23வது
வார்டாகவும், 4வது வார்டு, 24வது வார்டாகவும் மாற்றப்பட்டுள்ளன.
சென்னத்தூர் பஞ்சாயத்தின் ஒன்றாவது வார்டு நகராட்சியின், 25வது
வார்டாகவும், 3, 2, வார்டுகள், 26,27வது வார்டாகவும் மாற்றப்பட்டுள்ளன.
ஓசூர் பழைய நகராட்சியின், 21வது வார்டு 28வது வார்டாகவும், 14, 15
வார்டுகள், 29 வது வார்டாகவும், 12,13 வார்டுகள், 30வது வார்டாகவும், 27வது
வார்டு, 32வது வார்டாகவும், 26வது வார்டு 33வது வார்டாகவும், 18வது
வார்டு, 34வது வார்டாகவும், 19,20வது வார்டு, 35வது வார்டாகவும், 22,
23,24, 25 வார்டுகள், 36, 37, 38, 39வது வார்டுகளாகவும் மாற்றப்பட்டுள்ளன.
மத்திகிரி 3,4வது வார்டுகள், 40வது வார்டாகவும், 2வதுவார்டு, 41வது
வார்டாகவும், 15, 14, 1வது வார்டுகள், 42வது வார்டாகவும், 7,8,9 வது
வார்டுகள், 43வது வார்டாகவும், 10,11,12,13 வது வார்டுகள், 44வது
வார்டாகவும், 5,6வது வார்டுகள், 45வது வார்டாகவும் மாற்றப்பட்டுள்ளன.
பழைய நகராட்சியில் மொத்தம், 30 வார்டு இருந்தது. இதில், 10 பெண்
கவுன்சிலரும், 20 ஆண் கவுன்சிலரும் இருந்தனர். தற்போது அவற்றில், 8
வார்டுகளை குறைத்து, 22 வார்களாக மாற்றப்பட்டுள்ளன. இந்த, 22 வார்டுகளிலும்
20,21,22,24,28,29,30,32,43,39 ஆகிய, 10 வார்டுகள் பெண்களுக்கு
ஒதுக்கப்பட்டுள்ளன. இதனால், ஆண்கள் போட்டியிடுவதற்கு வெறும், 12 வார்டுகள்
மட்டுமே உள்ளன. அதேபோல், ஆவலப்பள்ளி பஞ்சாயத்தில் உள்ள, 4 வார்டுகளில், 3
பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால், தற்போது, 'சிட்டிங்' வி.ஐ.பி.,
கவுன்சிலர்கள் பலர் போட்டியிட வார்டு கிடைக்காததால், கலக்கத்தில் உள்ளனர்.


