Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/வீட்டு வசதி வாரிய நிலம் மீட்பு: 15 ஆண்டுக்கு பின் நடவடிக்கை

வீட்டு வசதி வாரிய நிலம் மீட்பு: 15 ஆண்டுக்கு பின் நடவடிக்கை

வீட்டு வசதி வாரிய நிலம் மீட்பு: 15 ஆண்டுக்கு பின் நடவடிக்கை

வீட்டு வசதி வாரிய நிலம் மீட்பு: 15 ஆண்டுக்கு பின் நடவடிக்கை

ADDED : செப் 07, 2011 02:40 AM


Google News
ஓசூர்: ஓசூர், ஈஸ்வர் நகரில் தனியார் ஆக்கிரமிப்பு செய்த, மூன்று கோடி ரூபாய் மதிப்புள்ள வீட்டு வசதிவாரியத்துக்கு சொந்தமான நிலம், அதிரடியாக மீட்கப்பட்டது. வீட்டுவசதி வாரிய அதிகாரிகள், போலீஸ் பாதுகாப்புடன் சென்று, நிலத்தில் போட்டிருந்த குடிசைகள், இரும்பு வேலி கம்பங்கள் மற்றும் மின்இணைப்புகளை அகற்றி நிலத்தை மீட்டதால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஓசூர் தாலுகாவில் நகர மேம்பாட்டிற்காக, கடந்த 1994ம் ஆண்டு தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் அரசு புறம்போக்கு மற்றும் தனியார் நிலத்தை கையகப்படுத்தியது. அந்த நிலத்தை மேம்படுத்தி, தார் சாலைகள் அமைத்து வீட்டுமனைகள், வீடுகள் கட்டி பொதுமக்களுக்கு விற்பனை செய்து வருகிறது. கையகப்படுத்திய நிலத்தின் உரிமையாளர்களுக்கு, அப்போதைய நிலத்தின் மதிப்புக்கு தகுந்தவாறு வீட்டுவசதி வாரியம் குறிப்பிட்ட தொகையை இழப்பீடாக வழங்கியது. இந்த பணம் போதாது எனவும், கூடுதல் தொகை வழங்க கோரியும் நிலத்தை கொடுத்த பலர், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். பெரும்பாலான வழக்கில், வீட்டுவசதிவாரியத்திற்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதனால், நிலத்தின் உரிமையாளர்கள் வீட்டு வசதிவாரியம் வழங்கிய இழப்பீட்டு தொகை பெற்றுக் கொண்டனர். அதே போல், ஓசூர் ஈஸ்வர் நகரில், கடந்த 1994ம் ஆண்டு வீட்டுவசதிவாரியம், 60 சென்ட் நிலத்தை தனியாரிடம் இருந்து கையகப்படுத்தியது. இந்த நிலத்திற்கான இழப்பீட்டு தொகையாக, 94ம் ஆண்டு 80 ஆயிரம் ரூபாய் நில உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டது. ஆனால், இழப்பீட்டு தொகை கிடைக்கவில்லை எனவும், நிலத்தை தங்களுக்கே வழங்க வேண்டும் எனவும், நிலத்தின் உரிமையாளர்கள் முனிவெங்கடராஜூ, விசாலாட்சி, முனிசாமிசெட்டி, ரகுராமன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு விசாரணை பல ஆண்டாக நடந்தது. தற்போது, நிலத்தின் மதிப்பு தற்போது, 3 கோடி ரூபாயாக உயர்ந்தது. அதனால், நிலத்தின் உரிமையாளர்கள் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் போதே, அந்த நிலத்தை ஆக்கிரமித்து சுற்றிலும் கம்பி வேலி அமைத்து குடிசைகள் போட்டு, மின்சார இணைப்பு பெற்று பயன்படுத்தி வந்தனர். இந்த வழக்கில் உயர்நீதிமன்றம் வீட்டு வசதிவாரியத்திற்கு சாதகமாக உத்தரவிட்டது. இதனால், ஓசூர் தமிழ்நாடு வீட்டுவசதிவாரிய செயற்பொறியாளர் சுப்பிரமணி தலைமையில், அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் நேற்று ஹட்கோ இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீஸார் பாதுகாப்புடன் சம்பந்தப்பட்ட நிலத்திற்கு சென்றனர்.

அங்கு வீட்டு வசதிவாரிய நிலத்தில் போட்டிருந்த தனியார் குடிசைகள், கம்பி வேலிகளை ஜே.சி.பி., எந்திரம் மூலம் அகற்றி மீட்டனர். அப்போது, நிலத்தை அனுப்பவித்து வந்தவர்களுக்கும், அதிகாரிகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. போலீஸார் இரு தரப்பினரையும் சமாதானம் செய்தனர். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. நிலத்தின் உரிமையாளர்கள் கூறுகையில், 'எங்களுடைய நிலத்தை கையகப்படுத்திவிட்டு இழப்பீட்டு பணத்தையும் கொடுக்கவில்லை; நீதிமன்றம் உத்தரவும் எங்களுக்கு இதுவரை வரவில்லை. அதற்குள், நிலத்தை மீட்பது எந்த விதத்தில் நியாயம்' என்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us