Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/கால தாமதமின்றி ரேஷன் கார்டு வழங்க கோரிக்கை

கால தாமதமின்றி ரேஷன் கார்டு வழங்க கோரிக்கை

கால தாமதமின்றி ரேஷன் கார்டு வழங்க கோரிக்கை

கால தாமதமின்றி ரேஷன் கார்டு வழங்க கோரிக்கை

ADDED : செப் 07, 2011 02:42 AM


Google News
தர்மபுரி : புதிய ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பித்த விவசாய தொழிலாளர்களுக்கு, காலதாமதமின்றி ரேஷன் கார்டுகளை வழங்க வருவாய்த் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

சங்கம் சார்பில், நல்லம்பள்ளி ஒன்றியக்குழு கூட்டம் லளிகத்தில் நடந்தது. ஒன்றிய தலைவர் மாதையன் தலைமை வகித்தார். செயலாளர் சின்னசாமி வேலை அறிக்கையினை சமர்பித்தார். மாவட்ட தலைவர் பிரதாபன் தீர்மானங்கள் குறித்து பேசினார். லளிகம் அரசு மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவியர் நலன் கருதி, தனியாக அரசு உயர்நிலைப்பள்ளி லளிகத்தில் துவங்க வேண்டும். எர்ரபையனஅள்ளி பஞ்சாயத்து கெட்டுஅள்ளி, ஏலகிரி பஞ்சாயத்து ஓமல்நத்தம் ஆகிய பகுதிகளில் உள்ள நடுநிலைப்பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்த வேண்டும். நார்த்தம்பட்டி அருந்ததியர் குடியிருப்பு பகுதியில் குடிநீர் வசதியும், லளிகம் மிகவும் பிற்பட்டோர் குடியிருப்பு பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும். எர்ரபையனஅள்ளி பஞ்சாயத்து கெட்டுஅள்ளி முதல் ஜம்பேரி வரையுள்ள மண் சாலையை தார் சாலையாக்க வேண்டும். வத்தல்மலை அடிவாரம் அட்டபள்ளத்தில் பழுதான குழாய் பாலத்தை மாற்றி கான்கீரிட் பாலம் அமைக்க வேண்டும், என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. ஒன்றிய பொருளாளர் மல்லையன், துணைத் தலைவர்கள் பாலகிருஷ்ணன், செல்வம், துணை செயலாளர்கள் கிருஷ்ணராஜ், ராஜி, ஒன்றிய குழு உறுப்பினர்கள் மாதம்மாள், கிருஷ்ணமூர்த்தி, ராஜாமணி உள்பட பலர் கலந்துகொண்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us