ADDED : செப் 07, 2011 05:19 PM
சென்னை: 'அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் டாக்டர்களுக்கு, போதிய குடியிருப்பு வசதிகளை செய்து தர வேண்டும்' என, அரசு டாக்டர்கள் சங்க, சென்னை கிளை வலியுறுத்தியுள்ளது.
தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தின் சென்னை மாவட்ட நிர்வாகிகள் தேர்தல் நடந்தது. இதில் தலைவராக பாலகிருஷ்ணன், செயலராக நெடுஞ்செழியன், பொருளாளராக ராமலிங்கம், துணைத் தலைவராக தினகர் மோசஸ், இணை செயலராக ரமேஷ் மற்றும் 10 செயற்குழு உறுப்பினர்களும் தேர்வு செய்யப்பட்டனர்.
சங்கத் தலைவராக பொறுப்பேற்ற டாக்டர் பாலகிருஷ்ணன் கூறும்போது, ''அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் டாக்டர்கள், உயர்கல்வி படிக்க வரும் மருத்துவ மாணவர்களுக்கும், பயிற்சி மருத்துவர்களுக்கும், தமிழக அரசு, போதிய குடியிருப்பு வசதியை ஏற்படுத்தித் தர வேண்டும். அரசு டாக்டர்கள் வீட்டு வசதி வாரியத்தையும், முதல்வர் ஏற்படுத்த வேண்டும்'' என்றார்.


