/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/அறையில் அமர்ந்து மதிப்பீடு: வீணடிக்கப்பட்ட அரசு நிதிஅறையில் அமர்ந்து மதிப்பீடு: வீணடிக்கப்பட்ட அரசு நிதி
அறையில் அமர்ந்து மதிப்பீடு: வீணடிக்கப்பட்ட அரசு நிதி
அறையில் அமர்ந்து மதிப்பீடு: வீணடிக்கப்பட்ட அரசு நிதி
அறையில் அமர்ந்து மதிப்பீடு: வீணடிக்கப்பட்ட அரசு நிதி
ADDED : செப் 07, 2011 11:01 PM
விருதுநகர் : விருதுநகரில் ரோடு பணிக்காக ஒதுக்கப்பட்ட ரூ.
9 கோடி நிதியை , நகராட்சி இன்ஜினியர்கள் நேரில் மதிப்பீடு செய்யாமல், அறைக்குள் அமர்ந்து குத்து மதிப்பாக மதிப்பிட்டதால், பல ரோடுகள் படு மோசமாக காட்சி அளிக்கின்றன .விருதுநகரில் பாதாள சாக்கடை திட்டத்தால் ரோடு சேதமடைந்தது. இதை சீரமைக்க சிறப்பு சாலை திட்டத்தில் 9 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. இதை அன்றைய நகராட்சி இன்ஜினியர்கள் ரவீந்திரன், பொன்னுத்தாய் ,அறைக்குள் உட்கார்ந்து மதிப்பீடு செய்துள்ளனர். இதனால் பல ரோடுகளின் அளவு தெரியாமல் மதிப்பீடு செய்யப்பட்டன.மூன்று வார்டில் உள்ள ஐந்து தெருக்களுக்கு மொத்தமாக நிதி ஒதுக்கீடு செய்தனர். எந்த தெருவுக்கு எவ்வளவு நிதி என கணக்கிடாமல் நிதி ஒதுக்கியதால், வாய் பேச தெரிந்த கவுன்சிலர்கள் மட்டும், இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டனர். சில தெருக்களிலே மொத்த நிதியும் தீர்ந்ததால், மீதம் உள்ள தெருக்களுக்கு ரோடு போடாமலே விட்டு விட்டனர். பட்டு தெரு, பூக்கடை வீதி என தெருவே நகராட்சியில் இல்லை. ஆனால் இத்தெருக்களுக்கும் ரோடு போட ரூ.25 லட்சம் நிதி ஓதுக்கப்பட்டுள்ளது. இதையும் நகராட்சி கூட்டத்தில் தீர்மானமாக நிறைவேற்றி உள்ளனர்.இதற்கு விபரம் தெரிந்த கவுன்சிலர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர். ரோடு போட முற்பட்ட போது,மேற்கண்ட தெருக்கள் இல்லை என்பது தெரிய வர , இதன் நிதியை, போஸ்ட் ஆபிஸ் தெரு, சிதம்பரம் தெரு, சேக்கிழார் தெருவிற்கு மாற்றினர். இதிலும் ரூ.10 லட்சம்தான் செலவானது . மீதமுள்ள 15 லட்சத்தை எந்த தெருவிற்கு பயன்படுத்துவது என்ற குழப்பத்தில் தற்போதைய அதிகாரிகள் உள்ளனர். குருநாதர் கோவில் தெருவிற்கு நிதி ஓதுக்கப்பட்டு, அந்த ரோடு ஏற்கனவே போடப்பட்டது என தெரிய, இதன் நிதி கொண்டு சத்ரியா பள்ளி ரோட்டை சீரமைத்தனர். காமராஜர் இல்லத்திற்கு செல்லும் ரோடுக்கு நிதி ஒதுக்கப்பட்டு, அங்கு பணி செய்யாமல் வேறு ரோடுகளுக்கு செலவிட்டுள்ளனர், தற்போது அந்த ரோடு கலெக்டர் பாலாஜியால் சுற்றுலா நிதியிலிருந்து சீரமைக்கப்பட்டுள்ளது .பொறுப்பு கமிஷனர் சேர்மக்கனி கூறுகையில்,'' ரோடு பணியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. மற்ற ரோடுகளுக்கான பணி விரைவில் துவங்கும் ,''என்றார். அதிகாரிகள் அலட்சியத்தால் தற்போது பாதிக்கப்படுவது அப்பாவி மக்கள்தான்.அரசின் நிதியை வீணடித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம் முன் வர வேண்டும்.


