/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/எஸ்.எஸ்.எல்.சி. பாடபுத்தகத்தில் வஉசி பற்றி தவறான வாசகத்தை நீக்க கோரிக்கைஎஸ்.எஸ்.எல்.சி. பாடபுத்தகத்தில் வஉசி பற்றி தவறான வாசகத்தை நீக்க கோரிக்கை
எஸ்.எஸ்.எல்.சி. பாடபுத்தகத்தில் வஉசி பற்றி தவறான வாசகத்தை நீக்க கோரிக்கை
எஸ்.எஸ்.எல்.சி. பாடபுத்தகத்தில் வஉசி பற்றி தவறான வாசகத்தை நீக்க கோரிக்கை
எஸ்.எஸ்.எல்.சி. பாடபுத்தகத்தில் வஉசி பற்றி தவறான வாசகத்தை நீக்க கோரிக்கை
ADDED : செப் 08, 2011 01:08 AM
திருநெல்வேலி : எஸ்.எஸ்.எல்.,சி., சமூக அறிவியல் பாடபுத்தகத்தில் வஉசி., பற்றி பற்றி குறிப்பிட்டுள்ள தவறான வாசகத்தை நீக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு சைவ வேளாளர் சங்க மாநில துணை தலைவர் பகவதிமுத்து நிருபர்களிடம் தெரிவித்தார்.
இது குறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது: இந்நிலையில் நடப்பு கல்வியாண்டில் எஸ்.எஸ்.எல்.சி.,சமூக அறிவியல் பாடபுத்தகத்தில்,' இந்திய விடுதலை இயக்கத்தில் தமிழ்நாட்டின் பங்கு' என்ற தலைப்பிலான பாடம் இடம் பெற்றுள்ளது. இதில் வஉசி., பாலகங்காதர திலகரைப் பின்பற்றி தீவிரவாதத்தை ஆதரித்தார். தமிழகத்தில் தீவிரவாதத்தை தீவிரமாக பரப்பினார். இதனால் இவர் மீது தேசத் துரோக கற்றம் தாக்கல் செய்யப்ட்டு, 40 ஆண்டுள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டு, காலில் சங்கிலி பூட்டப்பட்டு மாட்டை போல் கொட்டலில் அடைக்கப்பட்டார். அங்கு செக்கிழுத்தார் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆங்கிலேயரை எதிர்த்ததால் வஉசி.,க்கு கடுங்காவல் தண்டனை வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் தீவிரவாதி என பொய்யான முத்திரையை குத்தி சிறைக்கு அனுப்பினர். இந்த நூற்றாண்டில் தீவிரவாதி என்பதற்கு மிகக் கொடியவர் என்ற அர்த்தமாக எடுத்துக் கொள்ள வேண்டும். 10ம் வகுப்பில் இந்த பாடத்தை படிக்கும் மாணவர்கள் மனதில் வஉசி., பற்றி மிக கேவலமான எண்ணத்தை ஏற்படுத்தும். நாட்டின் சுதந்திரத்திற்காக போராடிய வஉசி., வக்கீலாகவும், கவிஞராகவும், இந்தியாவின் முதல் தொழில் சங்க தலைவராகவும் பதவி வகித்தவர். இத்தகைய சிறப்பு பெற்ற வஉசி., குறித்து பாடப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ள தவறான வாசகத்தை அரசு நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தமிழ்நாடு சைவ வேளாளர் சங்க மாநில துணை தலைவர் பகவதி முத்து நிருபர்களிடம் தெரிவித்தார். பேட்டியின் போது மாவட்ட செயலாளர் முருகேசன், பொருளாளர் கணேஷ் குமார், மண்டல செயலாளர் கணபதியப்பன், இணை செயலாளர் வீரபாகு உடனிருந்தனர்.


